டெல்லியில் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் கை..! கழட்டிவிடப்பட்ட ஓபிஎஸ்-பாஜகவின் திட்டம் என்ன.?

பாஜக கூட்டணி கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

பாஜக கூட்டணி கட்சி கூட்டம்

டெல்லியில் நடைப்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அதிமுகவின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உட்பட 38 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

NDA

எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம்

நேற்றைய கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  குறிப்பாக கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை ஓட்டல் வாசலுக்கே வந்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா வரவேற்றார்.  மேலும் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பிரதமரை மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் வாய்ப்பு வாய்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டது. கூட்டம் நடந்த அரங்கிலும் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமரவைக்கப்பட்டதும், குழு புகைப்படத்திலும் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி நிற்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


தேர்தல் வெற்றிக்கு அதிமுகவின் உதவி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில்,  குறிப்பாக தமிழகத்தில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு ஏதுவாக சில தொகுதிகளில் முன்கூட்டியே தேர்தல் வேலைகளையும் துவங்கி உள்ளது. தேர்தல் வேலையை துவங்கிவிட்ட்டாலும் அதிமுக உதவி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என பா.ஜ.க உணர்ந்துள்ளது. அதனால் தான் அண்ணாமலையுடனான கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் டெல்லியில் வைத்து எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது. 

அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இருந்த போதிலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வந்தாலும், அதை பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி, தங்கள் தொடர்பு டெல்லி பா.ஜ.க தலைவர்களுடன் தான் என தெளிவுபடுத்தினார்.  இந்நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அவருடன், தமிழகத்தில் இருந்து ஏ.சி.சண்முகம், ஏ.கே.மூர்த்தி, ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் பிரதமர் மோடி தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் வெற்றிக்கு அதிமுகவின் பங்கு முக்கியம் என்பதால் எடப்பாடிக்கு முக்கியத்துவம் அளித்ததாக கூறப்படுகிறது. 
 

ஓபிஎஸ் அழைக்கப்படாதது ஏன்.?

கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் இல்லாத சில கட்சிகளுக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்த போதிலும், எடப்பாடி பழனிசாமி விரும்பாத ஓ.பன்னீர்செல்வத்துக்கோ அல்லது டிடிவி தினகரனுக்கோ அழைப்பு விடுக்காதது எடப்பாடி பழனிசாமிக்கான முக்கியத்துவத்தை உற்று நோக்க வைத்த்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதை காட்டுகிறது.

இதையும் படியுங்கள்

அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை எந்த அமைச்சர் வீட்டில் தெரியுமா.? எச்.ராஜா வெளியிட்ட பட்டியல்

Latest Videos

click me!