திருப்பத்தூரில் பேசிய விளையாட்டுத்தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;- இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வர இருப்பதால் பாஜக, திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் மிரட்டிப் பார்க்கலாம் என்ற நப்பாசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பல்வேறு சோதனைகளைப் பார்த்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.
பி.எம்.கேர் பெயரில் வசூலான ரூ.32 ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டவில்லை. கடந்த ஆட்சியில் இப்படிப்பட்ட சோதனைகள் நடத்தி அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பாஜக அரசு. அதே வேலையை திமுகவிடமும் செய்ய பார்க்கிறது. அது கனவிலும் நடக்காது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மாதிரி பாஜகவை கண்டு பயப்படுகிற ஆட்கள் நாங்கள் கிடையாது. நாங்கள் கலைஞரின் வளர்ப்பு.
மத்திய அரசைப் பார்த்து திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார். 2021 தேர்தலில் எப்படி அடிமைகளை விரட்டினோமோ. அதேபோல வரக் கூடிய தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களான பாஜகவையும் வீட்டுக்கு அனுப்புவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.