முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழாவில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.73 ஏக்கர் நிலத்தில் 7 தளங்களுடன், அதிநவீன வசதிகளுடன் ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.