இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செங்கம் ஜி.குமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரை பதவியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இவர் பதவி பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.