டீ விற்றவரா இவர்..? என்ன ஸ்டைலு..! என்ன கெத்து..! மிரட்டும் மோடி..!

Published : Sep 01, 2025, 09:46 PM IST

தனது சிறுவயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திய டீக் கடையில் டீ விற்ற மோடியின் அபார உழைப்பும், அசாத்திய தலைமைப் பண்பும் அவரை ஒரு உலகளாவிய நாயகனாக்கி ரசிக்கிறது.

PREV
15

ஆமாம், பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் எப்போதுமே ஒரு ஸ்டைலும், கெத்தும் நிறைந்ததுதான்! ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO Summit) சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் மோடி பங்கேற்றது இந்தியா, சீனாவைத் தாண்டி உலகமே உற்று நோக்குகிறது. உலக அரங்கில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீதான வரிப் போரின் உக்கிரத்தின் மத்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மோடியின் சீனப்பயணம் இராஜதந்திர வெற்றியாகவும் கொண்டாடப்படுகிறது.மோடியின் இந்தப் பயணம் ட்ரம்பிற்கு மாபெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

25

இந்த மாநாட்டில், மோடி மற்றும் புதின் ஒரு மணி நேரம் ஒரே காரில் பயணித்து மனமுவந்து பேசியது, அவர்களின் நட்பை வெளிக்காட்டியது. மோடி, “புதினுடனான உரையாடல் எப்போதும் மறக்க முடியாதது” என்று எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். ஷி ஜின்பிங்குடனான சந்திப்பில், இந்தியா-சீனா உறவுகள் “போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கவும், எல்லைப் பிரச்சினைகளைப் பேசவும் உடன்பட்டன.

ட்ரம்பின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக்கியுள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இது “மேற்கத்திய நாடுகளுக்கு மோசமான செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

35

மோடி, ஜின்பிங்குடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பது, வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றைப் பற்றி ஆழமாகப் பேசினார். கடந்த ஆண்டு கசானில் நடந்த சந்திப்புக்கு பிறகு இந்தியா-சீன உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இருவரும் வரவேற்றனர். "நாங்க போட்டியாளர்கள் அல்ல; வளர்ச்சி கூட்டாளிகள்" என மோடி குறிப்பிட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

புதினுடன் சந்திப்பில், உக்ரைன்-ரஷ்ய போர் குறித்துப் பேசி, அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா உதவ தயார் என மோடி வலியுறுத்தினார். ஒரே காரில் இருவரும் பயணித்தது, அவர்களின் நெருக்கமான உறவை காட்டியது! மூவரும் ஒரே மேடையில் கை குலுக்கி, சிரித்துப் பேசிய காட்சிகள் உலக அரசியலில் ஒரு முக்கிய மொமண்ட். இந்த ஸ்டைலும், கெத்தும் மோடியின் தனித்துவமான அணுகுமுறையைத்தான் காட்டுகிறது. டிரம்பின் ‘வயிறு எரிய’ வைத்த மோடியின் நகர்வுகள், மோடி, டிரம்பின் நான்கு அழைப்புகளை நிராகரித்தது, இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்த அழுத்தத்தையும் ஏற்க மாட்டோம் என்று உலகிற்கு தெளிவாகக் காட்டியது. இது டிரம்பை வெறுப்படையச் செய்ததாக Nikkei Asia மற்றும் Frankfurter Allgemeine அறிக்கைகள் கூறுகின்றன

45

டிரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு பதிலாக மோடி, சீனாவுடன் உறவை மேம்படுத்துவதற்கு முனைப்பு காட்டினார். இது, அமெரிக்காவை மறைமுகமாக எதிர்க்கும் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டது. மோடி, டிரம்பின் ஆக்ரோஷமான பேச்சுகளுக்கு பதிலளிக்காமல், மவுனமாகவும் உறுதியாகவும் இருந்தது, டிரம்பின் எதிர்பார்ப்புகளை புரட்டிப்போட்டது. இது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் "நடுநிலை அல்ல, அமைதிக்கு ஆதரவு" என்ற மோடியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியது.

55

மோடி, உலகத் தலைவர்கள் மத்தியில், குறிப்பாக டிரம்புடனான உரையாடல்களில், இந்தியாவின் நலன்களை உறுதியாக பாதுகாத்து, தனது ‘கெத்து’ மற்றும் ‘ஸ்டைல்’ மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தை உயர்த்தினார். டிரம்பின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், சீனா, ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்தி, இந்தியாவின் முக்கிய சுதந்திரத்தை வெளிப்படுத்தினார். இந்த நகர்வுகள், டிரம்பின் "வயிறு எரிய" வைத்ததோடு, மோடியின் தலைமையை உலகளவில் மேலும் பேச வைத்துள்ளது. மோடியின் இந்த நகர்வுகள், இந்தியாவின் “பன்முனை உலக ஒழுங்கு” என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனாலும், இந்தியா மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளை முற்றிலும் கைவிடவில்லை, மாறாக உலக அரங்கில் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்போது பிரதமர் மோடி, சீனாவின் சமூக ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அங்கு ட்விட்டர் என்று அழைக்கப்படும் Weibo-வில் அவரைப் பற்றி மட்டுமே சீன மக்கள் பேசி சிலாகித்து வருகிறார்கள். தனது சிறுவயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திய டீக் கடையில் டீ விற்ற மோடியின் அபார உழைப்பும், அசாத்திய தலைமைப் பண்பும் அவரை ஒரு உலகளாவிய நாயகனாக்கி ரசிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories