ஆனால், ஊராட்சிகளுக்கு சப்ளை செய்யபவர்கள், ஒரு குப்பை தொட்டிக்கு, ஒரு தொட்டிக்கு, ரூ.86,000 வரை கணக்கு காட்டுகிறார்கள். பெரும்பாலான ஊராட்சிகளுக்கு குறைந்தது, 3 முதல் 10 குப்பை தொட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், 521 கிராமங்களுக்கு இந்த குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டிக்கு, 60,000 ஆயிரம் ரூபாய் இழப்பு என்றால், குறைந்த பட்சம் 500 குப்பை தொட்டிகளுக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.
மாவட்ட திட்ட அலுவலர்கள் இதுகுறித்துக் கூறுகையில், ' குப்பைத் தொட்டிகளின் அளவு, தரம் சரியாக உள்ளதா? என்று மட்டுமே நாங்கள் பார்ப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் இவர்களுக்கு ஆர்டர் கொடுங்கள் என வாய்மொழி உத்தரவிடுகிறார்கள்'' என்கிறார்கள்.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் இந்த குப்பைத் தொட்டிக்கான ஆர்டர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சர் தரப்பில் அவர்களது பினாமிகள் இந்த ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த குப்ப்பைத்தொட்டி விநியோகம், அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது. சிவகங்கை மாவாட்டத்தில் மட்டுமே குப்பைத்தொட்டியில் இவ்வளவு கோடி சம்பாதிக்கிறார்கள் என்றால் தமிழகம் முழுவதும் எத்தனை கோடி ரூபாயை கல்லாக்கட்ட இருக்கிறார்களோ’’ என வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.
இதனை அடுத்து குப்பைத் தொட்டி ஊழலை பாஜக வட்டாரம் தோண்டி துருவ ஆரம்பித்துவிட்டதாக தகவல். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தொடங்கி சம்மந்தப்பட்ட அனைத்து அமைச்சர்கள் நோக்கி விரைவில் அமலாக்கத்துறை பாய இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். குப்பை தொட்டியில் ஊழல் செய்தவர்கள் செந்தில்பாலாஜி போல பல மாதங்கள் சிறையில் இருக்கப்போவது நிச்சயம் எனக் கூறுகிறார்கள் இந்தமுறை, அமைச்சர்களோடு, அதிகாரிகளும் அமலாக்கத்துறை வலையில் சிக்கப் போவது உறுதி என்கிறார்கள் இதனை நோட் போட்டு டெல்லி மேலிடத்துக்கு தகவலை அனுப்பி வரும் பாஜக நிர்வாகிகள்.