தமிழக காங்கிரஸ் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் ஏ.பி.சூரியபிரகாசம் இதுகுறித்து, “கரூர் மாவட்டத்தில், கடந்த 27ம் தேதி நடந்த த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்டத் தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூர்சம்பவம் குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை துவக்கி உள்ளார். அவரின் விசாரணை சந்தேகத்திற்கு உரியது. அரசு பணத்தில் சலுகை பெறுபவர், எப்படி நேர்மையாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்? தென்மண்டல அறிவுரை கழக ஆலோசனை குழு உறுப்பினராக, மாநில அரசால் நியமிக்கப்பட்டு உள்ள நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை நேர் மையாக இருக்கும் என கூற முடியாது.