இந்நிலையில், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கவும் பாஜக 8 பேர் கொண்ட குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கரூரில் தவெக கட்சியின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராயவும், இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தமிழ்நாட்டின் கரூர் நகருக்குச் செல்ல குழுவை அமைத்துள்ளார்.
அதன்படி, ஹேமமாலினி, எம்.பி, அனுராக் தாக்கூர், எம்.பி, தேஜஸ்வி சூர்யா, எம்.பி, பிரஜ் லால், எம்பி, முன்னாள் டிஜிபி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, எம்.பி சிவசேனா. அப்ரஜிதா சாரங்கி, எம்.பி, ரேகா சர்மா, எம்.பி, தெலுங்கு தேசம் எம்.பி.,யான புட்டா மகேஷ் குமார்’’ ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.