தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம், தவெக தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் திரைப்பட இயக்குநரும், திமுக அனுதாபியுமான கரு.பழனியப்பன். தவெகவின் கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜயை உக்கிரமாக, ஒருமையில் பேசி வருவது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்து வருகிறது.
இந்நிலையில் விஜய் குறித்து மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ள கரு.பழனியப்பன், ‘‘எனக்கு விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்த பிறகு தான் அவர் ஏன் எப்படி இருக்கிறார் என்று நினைத்தேன். ‘‘சிஎம் சார்... என்னை என்ன வேணாலும் பழிவாங்குங்கள் சார்’’ என எஃப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லை எனத் தெரிந்தவுடன் அறிக்கை விடுவது இருக்கிறது இல்லையா அது மிகப் பெரிய காமெடித் தனத்தின் உச்சம். புஸ்ஸி ஆனந்தை ஒளித்து வைத்திருப்பது நீங்கள் தானே. அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா? இப்போது அவர் எங்கே போனார்? நீங்கள் ஏன் ஓடி ஒளிகிறீர்கள் முதலில்..