மோசமான ஆளுக இந்த கட்சிக்காரவுங்க..! செய்யுற ரெளவுடியிஸமே இவங்கதான்..! அன்றே எச்சரித்த விஜயகாந்த்..!

Published : Oct 03, 2025, 10:39 AM IST

தொண்டர்கள் மரத்தில் ஏறி இருந்தால் கைநீட்டி இறங்கச் சொல்லி கண்டிப்பு காட்டுவார் விஜயகாந்த். அவரது அக்கறை விஜய்க்கு இல்லை. விஜய் தொண்டர்களை கட்டுப்படுத்துவது இல்லை. எச்சரிக்கை விடுப்பதில்லை. விஜயகாந்தின் ஆளுமை, குணம் விஜயிடம் அறவே இல்லை என்கிறார்கள்.

PREV
14

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது தேமுதிக முதல் மாநாடு 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெற்றது. 25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிருந்து ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து, நகரம் முழுவதும் "விஜயகாந்த் தலையாகவே" தெரிந்தது. இது அவரது அரசியல் பயணத்தின் மைல்கல் என்று கருதப்படுகிறது. இந்த மாநாடு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தை மக்களிடம் உயர்த்தியது. இந்த மாநாட்டை, அவரது ஆளுமையை தற்போது, விஜய்யின் தவெக மாநாடுகள், பிரச்சாரங்களுடம் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

24

கரூர் 41 பேர் பலியான சம்பவத்திற்கு திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பு விஜய் கால தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என புகார் தெரிவிக்கின்றன.இந்நிலையில் விஜயகாந்த் மதுரை மாநாட்டில் பேசிய வீடியோவை திமுக எதிர்ப்பாளர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

34

அந்த வீடியோவில் விஜயகாந்த், ‘‘இங்கே இருக்கே லைட்டு வெளிச்சமா இருக்குன்னு நினைச்சிராதீங்க. எல்லாம் ஜெனரேட்டர். காசுதான். எல்லாத்தையும் டீசல் வைச்சு தான் ஓட்டிக்கிட்டு இருக்கிறோம். அதுலகூட எப்படிடா கட் பண்றதுண்ணு யோசிச்சுக்கிட்டு இருப்பாய்ங்க. நீங்க திரும்பிப் போகும்போது எச்சரிக்கையா, ஜாக்கிரதையா போகணும். பத்து பத்து வண்டியா போகணும். பதினைஞ்சு வண்டியா போகணும் எங்கேயும் தொந்தரவு பண்ணக்கூடாது. தூக்கம் வந்தால் வெளியில படுக்கக்கூடாது. ஊருக்குள்ள படுத்து தூங்குங்க. மோசமான ஆளுங்க இந்த கட்சிக்காரவங்க. கேட்டா எங்களுக்கு ரவிடியிசமே என்னான்னு தெரியாதுன்னு சொல்லுவாங்க. செய்யுற ரவுடியிஸமே இவங்கதான்’’ எனப் பேசி இருந்தார். அந்த வீடியோவை இப்போது பலரும் பகிர்ந்துள்ளனர்.

44

ஆனால், இன்னொரு தரப்பினரோ, விஜயகாந்த், னதனது தொண்டர்களை விரலசைவில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தொண்டர்கள் மீது அக்கறையாக இருந்தார். அவர்களது பாதுகாப்பு முக்கியம் எனக் கருதினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போது தொண்டர்கள் மரத்தில் ஏறி இருந்தால் கைநீட்டி இறங்கச் சொல்லி கண்டிப்பு காட்டுவார். அவரது அக்கறை விஜய்க்கு இல்லை. விஜய் தொண்டர்களை கட்டுப்படுத்துவது இல்லை. எச்சரிக்கை விடுப்பதில்லை. விஜயகாந்தின் ஆளுமை, குணம் விஜயிடம் அறவே இல்லை என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories