முகநூலில் ராமதாஸை கழுத்தை நெறுத்து, தலையை வைத்து கொலை செய்ய வேண்டுமென மாற்று கட்சியில் இளைஞரணி பதவியில் உள்ள நபர் கேவலமாக எழுதுகிறார் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘‘இன்றைய தினம் மகிழ்ச்சியான நாள் நீண்ட நாள் ஆசை நிறை வேறப்போகும் நாளாகவும், தான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் தமிழ் குமரனுக்கு பாமக மாநில இளைஞசங்க தலைவராக நியமனம் செய்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்குமரனுக்கு பேராதரவு தரவேண்டும்’’ என கூறிய அவர் நியமன கடிதத்தினை தமிழ் குமரனிடம் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி மற்றும் ராமதாஸ் வழங்கினர். அதன் பிறகு பேசிய அவர் தமிழ் குமரனுக்கு ஏற்கனவே பாமக இளைஞரணி சங்க தலைவர் கடிதம் கொடுக்கப்பட்டது.