சினிமாவை ஆண்டதே போதும் விஜய்..! நாட்டை ஆள நினைத்தால் அது நடக்காது..! கடுப்பேற்றும் தேவயானியின் கணவர்..!

Published : Oct 02, 2025, 01:35 PM IST

நாட்டையும் ஆள வேண்டும் என்பது அவருடைய மிக உயர்ந்த சிந்தனை. விஜய்க்கு அது நல்லதா? நடக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கேட்டேல் அது நடக்காது. அரசியலில் நல்லது செய்ய வேண்டும் என்றால் இருக்கிற இடத்தில்  இருந்தே செய்யலாம் என்கிறார் ராஜகுமாரன். 

PREV
14
வித்தியாசம் தெரியாத பாதரசம்

விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும், அவரது தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை நடத்தியதும், தமிழ் சினிமா உலகில் ஆதரவும், எதிர்ப்புமாக கலவையான கருத்துகள் எழுந்து வருகின்றன. பெரும்பாலான நடிகர்கள் விஜயின் அரசியல் பயணத்தை ஆதரிக்கவில்லை.அவரது பிரபலமான இமேஜ், சினிமா-அரசியல் தொடர்பு, திமுக- அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுடன் உள்ள போட்டி ஆகியவற்றால் இந்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

‘‘விஜய் சினிமா புகழைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயல்வது நகைச்சுவை.பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம்" என்று கருணாஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.

24
விஜய்க்கு அரசியல் செட் ஆகாது

கரூர் நிகழ்வுக்குப்பிறகு ‘‘விஜய்க்கு அரசியல் செட் ஆகாது என்று 2025-ல் முன்கூட்டியே எச்சரித்த்தேன். அரசியல் அனுபவமின்மை காரணமாக தோல்வி வரும் ’’ என்று நடிகர் ஆறு பாலா கூறினார். "வாழ்வைத் தொலைக்க கூட்டம் போடாதீர்கள். அரசியல் கூட்டங்கள் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்’’ என்று நடிகர் பார்த்திபன் விமர்சித்தார். கமல் ஹாசன், சத்யராஜ் போன்ற பல நடிகர்கள் திமுக ஆதரவு நிலையில் உள்ளனர். சில நடிகர்கள் விஜயின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்காமல், திமுக, அதிமுக, பாஜகவுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

34
இயக்குநர் ராஜகுமாரன் விஜய்க்கு எதிர்ப்பு

தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டே இருக்கிறது. ஆனால், கமல் ஹாசன் போன்றவர்கள் தோல்வியடைந்ததால், விஜயின் பிரவேசம், மீண்டும் ஒரு முயற்சி என்று பார்க்கப்படுகிறது. பல நடிகர்கள் விஜயின் அரசியல் வருகையை "பிரபலத்தைப் பயன்படுத்திய தவறான அரசியல்" என்று விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், நடிகை தேவயானியின் கணவரும், இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன் விஜயின் அரசியலுக்கு எதிர்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘‘விஜய் நல்லது செய்வதற்குத்தான் அரசியலுக்கு செல்கிறேன் போகிறேன் எனச் சொன்னால் நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன். 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு இருக்கிற நீங்க அதை வைத்துக் கொண்டு மக்களுக்கு எவ்வளவோ நல்லது பண்ணலாம். ஒரு அரசாங்கத்தால முடியாததைக்கூட நீங்க செய்யலாம்.

44
சினிமாவை மட்டும் ஆண்டது போதாதா?

விஜய் அரசாங்கத்தையே ஆளனும் என நினைக்கிறார். இந்த சினிமாவை மட்டும் ஆண்டது போதாதா? அவர் சினிமாவ நிச்சயமாக ஆள்கிறார். நாட்டையும் ஆள வேண்டும் என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. நல்லது செய்வதற்கு பணம் இருந்தாம் நம்ம எவ்வளவோ நல்லது செய்யலாம். வாங்கும் சம்பளத்தில் 100 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு 300 கோடியை மக்களுக்கு செய்யலாம். இதை அரசாங்கத்தால்கூட செய்ய முடியாது. வருஷத்தில் இரண்டு படங்களில் விஜய் நடிக்கிறார்.

அரசியல் அவ்வளவு நல்லது கிடையாது. அதைச் சமாளிக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது. நீங்கள் எங்கே நல்லது செய்வீர்கள்? சும்மா விட்டுவிடுவார்களா? அரசியலில் நல்லது செய்ய வேண்டும் என்றால் நாம் இப்போது இருக்கிற இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். அவர் அரசியலுக்கு வந்து அதை செய்யலாம், நாட்டையும் ஆள வேண்டும் என்பது அவருடைய மிக உயர்ந்த சிந்தனை. விஜய்க்கு அது நல்லதா? நடக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கேட்டால் அது நடக்காது’’ எனத் தெரிவித்துள்ளார் ராஜகுமாரன்.

Read more Photos on
click me!

Recommended Stories