அன்புமணியில் பதவியில் தமிழ்குமரன்..! இனி பாமகவில் வாரிசு அரசியலே கிடையாது..! வாயடைக்க வைத்த ராமதாஸ்..!

Published : Oct 02, 2025, 12:15 PM IST

தனது குடும்பத்தில் இருந்து வாரிசு அரசியல் இனி இல்லை என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களிடம் தனது குடும்பத்தில் இருந்து மீண்டும் வாரிசு அரசியல் என்கிற மன வருத்தம் வந்துவிடக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

PREV
14
Tamil kumaran

ராமதாஸின் வாரிசு அரசியல், கட்சியை வலுப்படுத்தியது என்றாலும், உட்கட்சி மோதல்களை குறிப்பாக குடும்ப மோதலை ஏற்படுத்தியுள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தலில் இது கூட்டணி முடிவுகளைப் பாதிக்கலாம். அன்புமணி தலைமையை வலுப்படுத்த முயல்கிறார். ஆனால், ராமதாஸின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை. அவர்களுக்குள் எழுந்துள்ள மோதல் இது தமிழக அரசியலில் ‘குடும்ப சொத்து vs கட்சி நலன்’ என்ற விவாதத்தைத் தூண்டி உள்ளது. இந்நிலையில் மீண்டும் தனது குடும்பத்தில் இருந்து யாருக்கும் பதவி வழங்கக் கூடாது என்கிற முடிவில் இருக்கிறார் ராமதாஸ் என்கிறார்கள்.

24
நான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில்...

இந்நிலையில், தனது பேரன் முகுந்தனுக்கு வழங்கப்பட்ட மாநில இளைஞரணி தலைவர் பதவியை பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு தற்போது வழங்கியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் ஒருவர் தமிழ்க்குமரன். தமிழ்க்குமரனை பாமக இளைஞரணித் தலைவராக நியமனம் செய்கிறேன். இவருக்கு ஏற்கெனவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. நான் தான் அந்த நியமனக் கடிதத்தை அவருக்கு கொடுத்தேன். உடனே இதனை தமிழ்க்குமரன், அன்புமணியிடம் போனில் கூறியுள்ளார். அதற்கு, ‘இதை ஏற்கமுடியாது, உடனடியாக நீ பொறுப்பை ராஜினாமா செய்’ என்று சொல்லியுள்ளார். நான் ராஜினாமா செய்யவேண்டாம் என சொன்னேன்.

34
பேரனை தவிர்த்த ராமதாஸ்

பின்னர் சில மாதங்களில் கட்சியின் பொதுக்குழு நடந்தது. பொதுக்குழுவுக்கு வருவதற்காக தமிழ்க்குமரன் குடும்பத்துடன் வந்திருந்தார். ஆனால், தமிழ்க்குமரன் பொதுக்குழுவுக்கு வரக்கூடாது என அன்புமணி சொல்லிவிட்டார். இதனால் மனம் நொந்து அவர் திரும்பிவிட்டார். பின்னர் 2 மாதம் கழித்து அந்த நியமனக் கடிதத்தை கிழித்துப் போடச் சொன்னேன். அதன் பிறகு கடந்த ஆண்டு பொதுக்குழுவில் என் மூன்றாவது பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை வழங்கினேன். அப்போதுதான் மைக்கை தூக்கி போட்டார் அன்புமணி. இப்போது மீண்டும் தமிழ்க்குமரனை இளைஞரணித் தலைவராக்கியுள்ளேன். அவர் இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்

44
இனி வாரிசு அரசியல் கிடையாது

பாமக முன்னாள் தலைவரான ஜி.கே.மணியின் மகனான தமிழ்க்குமரனை இளைஞரணித் தலைவராக நியமிக்கும் கடிதத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகள் காந்திமதி ஆகியோர் அவரிடம் வழங்கினர். இந்நிலையில் ராமதாஸின் பேரனுக்கு வழங்கிய இளைஞரணி தலைவர் பதவியை மீண்டும் தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளார் ராமதாஸ். இதன் மூலம் தனது குடும்பத்தில் இருந்து வாரிசு அரசியல் இனி இல்லை என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களிடம் தனது குடும்பத்தில் இருந்து மீண்டும் வாரிசு அரசியல் என்கிற மன வருத்தம் வந்துவிடக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories