தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் அரங்கில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்று தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஆதவ் அர்ஜுனா. கடந்த சில மாதங்களாக தவெக கட்சி விரிவாக்கத்திலும், அடுத்த தேர்தலை முன்னிட்டு வியூகத்தையும் தீவிரமாக வகுத்து வருகிறது. இந்த நிலையில், கட்சியின் முக்கிய முகமாக அறிமுகமாகியுள்ள ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவத்தை தொடர்ந்து திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24
ஆதவ் அர்ஜுனா பயணம்
ஆதவ் அர்ஜுனா தனது பயணத்தைக் குறித்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடாமல், அவசர அவசரமாக டெல்லிக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் பயணத்தால் பல்வேறு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அவர் யாரை சந்திக்கிறார்? என்ன காரணத்துக்காக இந்த டெல்லி பயணம்? என்பது மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. சில தகவல்களின் படி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தனது கூட்டணித் திட்டங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
34
தவெக பாஜக கூட்டணி பேச்சு
இந்த நிலையில், தேசிய அளவிலான சில கட்சித் தலைவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காகவே ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய அசாதாரண அரசியல் சூழ்நிலையில் தவெக எந்த பக்கம் சாய்கிறது என்பது பெரும் விவாதமாக மாறியுள்ளதால், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய அளவிலான தலைவர்களை சந்தித்து ஆலோசனைகள் நடத்துவதாகவும், சில முக்கிய அரசியல் உடன்படிக்கைகள் பற்றி பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் அவர் சந்திக்கும் தலைவர்கள் மற்றும் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தவெகவின் அடுத்தடுத்த அரசியல் திசை தெளிவாகும் என்பது உறுதி. கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த பயணம் உள்ளது என்று ஒருபக்கமும், பாஜக தலைவர்களை சந்திப்பதற்காகவே இந்த பயணம் என்று மற்றொரு பக்கமும் பேசப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.