சத்தியபாமா திருப்பூர் தொகுதியில் இருந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தவர். 2018-ல், அவரது கணவர் வாசு, சத்தியபாமாவை கத்தியால் குத்த முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தனிப்பட்ட வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது நியாயம் கேட்டு ஓ.பி.எஸ் ஜெயலதாவின் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். பல எம்.எல்.ஏக்களும், எம்.பி-க்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பி.ஆர்.சுந்தரம், கே.அசோக்குமார், ஆர்.வனரோஜா, ஜெய்சிங் தியாக ராஜ் நட்டர்ஜி, ஆர்.பி.மருதராஜா, பி.செங்குட்டுவன், எஸ்.ராஜேந் திரன், பார்த்திபன் ஆகிய 9 மக்களவை உறுப்பினர்கள், ஆர்.லட்சு மணன், வி.மைத்ரேயன் ஆகிய 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 11 எம்.பி.க்கள் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 11 மக்களவை எம்.பி.க்களில் ஒருவராக இருந்தவர் சத்தியபாமா.