
செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் அதிமுகவில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் கோவையில் தொடங்கியபோது, செங்கோட்டையன் இதில் பங்கேற்கவில்லை. இது கோவை மற்றும் கொங்கு மண்டலத்தில், அவரது சொந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி என்பதால், இது மீண்டும் மோதல் வெடிப்பதற்கு காரணமாக அமைந்தது.
இன்று, செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பில், அவரது மேசையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இருந்தன, ஆனால் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம்பெறவில்லை. அப்போது பேசிய அவர், ‘‘இந்த இயக்கத்தை பொறுத்தவரை ஏழை, எளிய மக்களுக்காக, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்டு இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்தார்கள். மறைந்ததற்கு பிறகு 2016 ஆட்சிக்கட்டிலில் அம்மா அவர்கள் வெற்றிவாகை சூடி ஓராண்டு காலத்திற்கு பிறகு அவர் மறைந்தார். பிறகு இந்த இயக்கத்திலே பல்வேறு சோதனைகள் வந்த போது எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது, இந்த இயக்கத்தை பேணி காக்க வேண்டும் என்ற முறையில் அன்றைய பொதுச் செயலாளராக திருமதி சசிகலா அவர்களை ஒருமனதாக நாங்கள் நியமித்தோம்.
அதற்கு பிறகு காலச்சக்கரங்கள் சுழன்று மீண்டும் முதலமைச்சர் யார்? என்று நினைத்தபோது அன்றைய முன்னாள் முதலமைச்சர், எதிர் கட்சி தலைவர் ஓ.பி.எஸஸை முன்மொழிந்தார். ஆனால் இந்த இயக்கம் பல்வேறு சோதனைகள் வருகிற போது, இந்த இயக்கத்தை பொறுத்தவரையிலும் பல்வேறு தடுமாற்றங்கள் வருகிற போது, தடுமாற்றம் இல்லாமல் இந்த இயக்கத்திலேயே நான் பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறேன் என்று புரட்சித்தலைவர் அம்மா அவர்கள் ஆடியோ மூலமாக, நிகழ்ச்சியின் மூலமாக என்னை பாராட்டியதும் அனைவருக்கும் தெரியும்.
நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால் நமக்கு பல்வேறு நிலை என்று பணியாற்றுகிற போது நெடும் பயணத்தை நாம் மேற்கொள்கிற பொறுப்புகள் கிடைக்கும். பல்வேறு சோதனைகள் வரும். அந்த சோதனைகள் அனைத்தும் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும்? தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் வாழ்கிற மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும்? இந்த இயக்கத்தை நம்பி இருக்கிற கோடான கோடி தொண்டர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு எந்த தியாகத்தையும் செய்வதற்கு நான் அன்றைக்கு தயாராக இருந்தேன்.
இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. அந்த வாய்ப்புகள் கிடைத்த போதுகூட இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு தான், நான் என் பணிகளை மேற்கொண்டேன். எதற்கு என்று சொல்கிறேன் என்றால் உங்களுக்கே தெரியும் பத்திரிகையாளர்களுக்கு தெரியும். ஆகவே இதையெல்லாம் எடுத்துச் செல்வதற்கு காரணம், ஒரு இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு. இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்கு காரணமே இது நம்பி இருக்கிற கோடான கொடி தொண்டர்கள். புரட்சித்தலைவர், புரட்சிதலைவி அம்மாவுடைய நல்லாட்சியோடு இந்த இயக்கம் மீண்டும் தமிழகத்தில் உருவாவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேணண்டும் என்ற முறையில் தான் எல்லோரும் மொழிகளில் அந்த பணிகளை நாங்கள் மேற்கொண்டோம்.
2016 பிறகு தொடர்ந்து தேர்தலை சந்திக்கிறோம். தேர்தல் களம் என்பது எவ்வளவு போராட்ட களமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நான் எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் புரட்சித்தலைவி பற்றி காளிமுத்து அவர்கள், கண்ணதாசன் போன்றவர்கள் மற்ற பெயரை சொல்லவில்லை உயிரோடு இருக்கிறார்கள் அவர்கள் பேசிய வார்த்தைகள் இன்றும் தொண்டர்கள் மத்தியில் நெஞ்சத்திலே முள் குத்துவது போல இருந்தது.
பண்போடு வயது முதிர்வர்களாக இருந்தாலும் அரசியல் அனுபவிக்கவர்களை வைத்துக் கொண்டுதான் இந்த இயக்கத்தை நடத்த முடியும். இந்த ஆட்சி நடத்த முடியும் என்ற நோக்கத்தோடு தான் இந்த பணிகளை அம்மா அவர்கள் மனம் விட்டு சட்டமன்றத்தில் பேசியது அந்த பதிவேட்டில் இருக்கிறது. இதையெல்லாம் நீ நினைவூட்டுகிறேன் என்று சொன்னால் 2017 நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தோம். அதற்கு பிறகு 2019 தேர்தல், 21 தேர்தல் அதற்கு பிறகு 2024 தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்ற தேர்தலில் நாம் சந்திக்கின்ற போது களத்திலே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. 2024 இன்றைக்கு நாம் நினைக்கிறோமே பாஜக கூட்டணியோடு அன்று கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியும்.
இதையெல்லாம் நான் அவர்களிடத்திலே நினைவூட்டினோம். சகோதரர் எஸ்.பி.வேலுமணி கூட இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதற்கு பிறகு நாங்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி சந்தித்தோம். சந்தித்ததற்கு காரணமே கழகம் தொய்வோடு இருக்கிறது. தேர்தல் களத்திலே நாம் எவ்வளவு வியூகத்தை வளர்த்தாலும் வெற்றிபெற முடியவில்லை. கழகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும். அதே நேரத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நாம் நிறைவேற்ற வேண்டும் என்ற முறையிலே அன்றைக்கு அண்ணன் நத்தம் ஈஸ்வநாதன், சகோதரர் எஸ் பி.வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் நாங்கள் ஆறு பேரும் அவரை சந்தித்தோம்.
இந்த கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. கருத்து பரிமாற்றங்களை அவர் கேட்டதற்கு பிறகு அவரை பொறுத்தவரையிலும் அந்த கருத்து ஏற்றுக் கொள்கிற மனநிலையில் அவர் இல்லை. நான் எதற்காக சொல்கிறேன் என்றால், மறப்போம் மன்னிப்போம். வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். இந்த தேர்தலில் களத்தில் நாம் வெற்றி பெற இதைத்தவிர இந்த தலைவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிற பாடம். புரட்சித் தலைவரைவிட செல்வாக்கு மிக்க தலைவர் இல்லை.புரட்சித்தலைவி அம்மாவை விட செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. 2010ல் நாம் டெபாசிட் இழந்ததற்கு பிறகு கோவையில் நடைபெற்ற கூட்டத்தால் கோவை குலுங்கியது. மதுரை நடுங்கியது. திருச்சி திரும்பியது. 15 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
அப்போது கலந்து கொண்டு கூட அன்றைக்கும் கூட்டணி வலிமையாக வேண்டும் வெளியே சென்றவர்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தேமுதிகவை அழைத்து பல்வேறு பேச்சு வார்த்தைகளை நடத்தி அவர்களோடு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மதிமுகவை இணைத்து வெற்றி வாகி சூடுவதற்கு ராஜதந்திரத்தோடு ஒரு நல்ல வியூகத்தை வகுத்து வெற்றி பெற்றார் என்பது வரலாறு. 2016ல் அப்படித்தான் வெற்றி பெற்றார். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி அல்ல. வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும்.
ஒன்றே ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் வேண்டுகோள் எந்த கண்டிஷனும் இல்லை. எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களோடு இணைந்து பணியாற்றுகிறோம். நாட்டு மக்கள் நலன் கருதி தொண்டர் நலன் கருதி கடிதங்கள் மூலமாகவும் அவர்கள் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி கொடுத்துக் கொண்டிருக்கிற போது எல்லோரும் என்ன செய்வது என்று நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். யார் இதைப் பற்றி சொல்வது என்ற நிலையிலேயே தான் இன்று மனம் திறந்து பேசுகிறேன். உங்களை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் என்று சொன்னால் ஒரு இயக்கம் எல்லோருக்கும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக இருக்கின்ற இயக்கமாக இருக்க வேண்டும். நமக்கு சகோதரர் பாசம் இருக்கிறது. அந்த சகோதர பாசத்தோடு நமது வெற்றியின் இலக்கில் ஏற்றுவதற்கு மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சி மற்றும் தேவை என்கிற பொழுதுதான் வெற்றியின் இலக்கை நாம் எட்ட முடியுமே தவிர, நாளை நமது ஆட்சி மலரப் போகிறது என்று யாராலும் சொல்ல இயலாது. அப்படி வெற்றிவாகி சூடுவதற்கு நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு இது போன்ற நல்லவர்களிடத்திலே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கருத்தின் அடிப்படையில் தான் எல்லோரையும் அழையுங்கள். வெளியே சென்றவர்களை நாம் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள் வேண்டுகோள் வைப்பது எந்த பொறுப்பும் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்கிறார்கள். மன மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை நம்பி இருக்கிற கோடான கோடி மக்கள் என்ன நினைக்கிறார்கள். அதை வெற்றிகரமாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலர நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நிலையை நான் இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன்.
அப்படி செய்கின்ற போது அதற்கு கால அவகாசம் விரைந்து முடிக்கப்பட வேண்டும். விரைந்து முடித்தால் மட்டும் தான் தேர்தல் களத்தில் இருக்க முடியும். ஏனென்றால் தேர்தல் களம் இன்று துவங்கிவிட்டது. எல்லோரும் தேர்தல் களத்தில் தங்கள் பயணத்தை தொடங்கி விட்டார்கள். ஆகவே விரைந்து இதற்கான நல்ல முடிவுகளை எட்ட வேண்டும் என்பதை எங்களுடைய வேண்டுகோள். அப்படி விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால் இந்த மனத நிலையில் இருக்கின்ற அனைவரையும் ஒருங்கிணைந்து அதை செயல்படுவோம்.
அதோடு மட்டுமல்ல. இந்த பணிகளை சரியான முறையில் எல்லோரும் ஒருங்கிணைப்பதற்கு நாம் கொடுக்கப்பட்டிருக்கிற கால அவகாசத்தில் அதை செய்யவில்லை என்றால் எதிர்பார்க்கின்ற ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி அமைப்பதற்கு எதுவாக அமையாது. எமது வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். அதை செயல்படுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் யார் யார் எதிரான மனநிலையில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க தயாராக இருக்கிறோம். இது வெற்றிபெற்று முடி வந்தால் மட்டும் தான் அந்த வெற்றி பயணத்தில் நான் கலந்து கொள்வேன் என்று நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். நாடு நலன் காக்க, நாட்டு மக்கள் நலன் காக்க, தொண்டர்கள் நலம் காக்க புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் அவர்களின் நல்லாட்சி மலர எனது பணிவான வேண்டுகோள்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.