திமுகவா? அதிமுகவா..? ஓ.பி.எஸே ஓடினாலும் இந்த ஒரத்தநாட்டான் ஓட மாட்டான்..! அடித்துச் சொன்ன வைத்திலிங்கம்..!

Published : Nov 13, 2025, 03:01 PM IST

வைத்திலிங்கம் எந்தக்கட்சிக்கும் செல்லமாட்டார். அவர் கொள்கைப்பிடிப்பானவர். அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியும், 99% இதற்கு வாய்ப்பில்லை, இது வதந்தி’’ என்கிறார்கள்.

PREV
14

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 4 முனைப் போட்டி உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக என்று 4 கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இன்னொரு புறம் பாஜக கூட்டணியில் இருந்து வெளி வந்துள்ள ஒபிஎஸ் மற்றும் அமமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியம் குறைவாகவே இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்களில் முக்கியமானவராக இருந்த மனோஜ் பாண்டியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இதனால் தென் மாவட்டங்களில் திமுக கூடுதல் வலிமை பெற்றுள்ளது. இந்த நிலையில் திமுகவின் அடுத்த இலக்கு ஒபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தான் என்று கூறப்பட்டு வந்தது. ஏனென்றால் ஒபிஎஸ் அணியில் இருப்பவர்களை எடப்பாடி பழனிசாமி ஏற்க தயாராக இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக தரப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாகவே வைத்திலிங்கத்திடன் பேசியதாக சொல்லப்பட்டது.

24

இந்த சூழலில், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என கூறி வந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓபிஎஸஸு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் என்ன செய்யப்போகிறார் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. அவர் திமுகவில் இணையப்போவதாகவும், அதிமுகவில் இணைப்போவதாகவும் கூறப்பட்டு வந்தன. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த போது வைத்திலிங்கமும் திமுகவில் இணைப்போவதாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘வைத்திலிங்கம் கொள்கைக்காக தன் நிலையை உயர்த்திக் கொண்டிருப்பவர். சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் எந்த காலத்திலும் எந்த இயக்கத்திற்கும் போகமாட்டார் என்பதை உறுதியாக சொல்கிறேன்’’ என அடித்துச் சொல்லி இருந்தார்.

இந்நிலையில் அவர் அதிமுகவில் இணையவிருப்பதாகவும், அவருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியை வழங்க எடப்பாடி பழனிசாமி முன் வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை அடியோடு மறுத்துள்ள வைத்திலிங்கம் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். ‘‘ நான் மீண்டும் அதிமுகவில் சேருவது என்பதில் உண்மையில்லை. நாளிதழில் வெளியானது உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, விஷமத்தனமான செய்தி’’ என உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

34

இந்த வதந்திகள் குறித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்களிடம் பேசினோம். "ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்க நபராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை தன் கட்டுக்குள் வைத்திருந்து, சோழ மண்டல தளபதியாக பவர்புல் மேனாக இருந்தார்.

இந்நிலையில், 2016 தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை எதிர்கொண்டார். அதன் பிறகு அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, 2021 தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தனக்கு இனி அரசியல் எதிர்காலம் என உணர்ந்தவர் கடுமையாக செலவு செய்து மீண்டும் ஒரத்தநாடு தொகுதியை தனதாக்கி கொண்டார். இந்த சூழலில் அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் தனியாக பிரிந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார்.

இதற்கான காரணகர்த்தா வைத்திலிங்கம்தான் என அப்போது பேசப்பட்டது. அதன் பின்னர் தலைமை கழகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஓபிஎஸ் அணியில் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் ஆர்.டி.ராமச்சந்திரன், திருவையாறு எம்.ஜி.எம். சுப்ரமணியன், இராமநாதபுரம் தர்மர், தேனி சையதுகான், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் மட்டும் உள்ளனர்.

இதில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஐயப்பன் ஆகியோர் எம்.எல்.ஏக்கள். இவர்கள் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.பி. கிருஷ்ணன் மதில் மேல் பூனையாக எந்த பக்கமும் இல்லாமல் ஒதுங்கி நிற்கிறார். ஒருங்கிணைப்பு குறித்து பலரும் பேசி வந்தாலும், சிலருக்கு கட்சியில் இடம் அறவே கிடையாது என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிரிந்த அனைவரும் ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இவை நடக்காது என்பதை உணர்ந்ததால் மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்று விட்டார்.

44

வைத்திலிங்கத்திடம் இருந்த அறிவுடை நம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே எடப்பாடியிடம் சென்று விட்டனர். தற்போது, வைத்திலிங்கத்தின் செல்வாக்கு குறைந்திருப்பதாக தான் சொல்ல வேண்டும். ஆனால் கட்சி வேலையில் அவர் ஆளுமை மிக்கவர். திமுகவின் சோழமண்டல தளபதியாக அறியப்பட்டவர் கோசி.மணி. இவருக்கு இணையாக, அதிமுகவின் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் தஞ்சாவூரை அதிமுகவின் கோட்டையாக மாற்றினார். வைத்தியை செயல்வீரர் என்று பலமுறை பாராட்டியிருக்கிறார் மறைந்த ஜெயலலிதா.

இந்த சூழலில், வைத்திலிங்கத்தை திமுகவிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஸ் நேரடியாக தொடர்பு கொண்டு, “வைத்திலிங்கத்திடம் திமுகவுக்கு வந்துடுங்க, உங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கிறோம்” என பேசியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், வைத்திலிங்கம், “எனக்கான அடையாளத்தை தந்தது அதிமுக. நான் வாழ்கிற வாழ்க்கை என் இயக்கத்தாலும், ஜெயலலிதா அம்மாவாலும் கிடைத்தது” என்று அன்போடு மறுத்து விட்டார். இதை அன்பில் மகேஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “மூச்சு அடங்கிய பிறகு என் உடம்பில் அதிமுக கரை வேட்டி இருக்க வேண்டும்” என்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பேசத் தொடங்கியதும், அதிமுகவில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது' என சொன்ன வைத்திலிங்கம், "அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள். அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள்" எனக் கூறி வரும் வைத்திலிங்கம் எந்தக்கட்சிக்கும் செல்லமாட்டார். அவர் கொள்கைப்பிடிப்பானவர். அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியும், 99% இதற்கு வாய்ப்பில்லை, இது வதந்தி’’ என்கிறார்கள். ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் மீது வைத்டிதிருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories