சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசிக கட்சியினரால் கடந்த மாதம் 7ம் தேதி தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திருமாவளவனின் செயல்பாடுகளை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘நான் ராஜீவ் காந்தி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன். அக்டோபர் 7-ம் தேதி தாக்கப்பட்ட வழக்கறிஞர் நான் தான். விசிக கட்சியினர் என்னைப் பற்றி சோசியல் மீடியாக்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கு விளக்கம் கொடுக்கத்தான் இந்த வீடியோ. அக்டோபர் 7ஆம் தேதி எனது அடையாள அட்டையை வாங்குவதற்காக பார் கவுன்சிலிற்கு வந்தேன். நான் ஓட்டிக்கொண்டு வந்த வண்டி ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கும்போது எனக்கு பின்னாடி வந்த வண்டி ஒன்று இடித்தது.
ஏன் இடித்தீர்கள் பார்த்து வர மாட்டீர்களா? என்று கேட்டபோது அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் வண்டியை நிறுத்திவிட்டு சென்று கேட்கும் போது உள்ளே திருமாவளவன் இருந்ததால் நான் திருப்பி விட்டேன். இறங்கி வந்து என்னை தாக்க ஆரம்பித்தார்கள். என் வண்டியை தள்ளிவிட்டு சாலையில் போட்டு தாக்கினார்கள். கும்பலாக சேர்ந்து என்னையும் தாக்கினார்கள். அங்கிருந்த காவல்துறையினர் பாதுகாப்பிற்காக என்னை பார் கவுன்சிலர்கள் போகுமாறு சொன்னார்கள். நான் பார் கவுன்சிலுக்குள் ஓடி விட்டேன். பார் கவுன்சிலுக்கு உள்ளேயும், வெளியேயும் என்னை தாக்கினார்கள்.