‘‘தமிழக மக்கள் திமுக அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். சாதரண கோபம் கிடையாது. சுனாமியாக வந்து திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றும்’’ என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்துப்பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது சாதிவாரி கணக்கெடுப்பு. நான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். தமிழ்நாடு இந்த வேகத்தில் சென்றால் 50 ஆண்டுகளில் வளரும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். ஆனால் அதை எடுக்க மாட்டோம், எடுக்க மாட்டோம் என்று பிடிவாதமாக ஸ்டாலினும், அவருடைய கூட்டணி கட்சிகளும் இருக்கின்றனர்.