தவெக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு எனவும் அழைப்பு விடுத்திருந்தார் விஜய். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாகவும் இருந்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போதும் ராகுல் காந்தி நேரடியாகவே விஜய்யுடன் தொலைபேசியில் ஆறுதல் கூறி இருந்தார். காங்கிரஸ் கட்சியினரும் ஆட்சியில் பங்கு என்கிற கோஷத்தை தமிழகத்தில் முன்னெடுத்து வருகின்றனர். முன்பைவிட அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
2011ல் சுமார் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருக்கிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
காமராஜர் குறித்த திமுகவின் பேச்சால் கோபமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக கூட்டணிக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் எம்.பி., மணிக்கம் தாக்கூர், விஜயை தமிழத்தில் முக்கிய சவாலாக மாறி வருகிறார் என்று கூறினார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள தவெகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக சீட்டுகள் ஆட்சியில் பங்கு கிடைக்கலாம் என்பதை விரும்புகின்றனர்.தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.