
‘‘பாஜக, தவெகவுக்கு அடைக்கலம் கொடுக்கிறது எனச் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?’’ என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘சமூக வலைதளத்தில் வரக்கூடிய கருத்துக்களை நீதிபதி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றி இப்பொழுதும் கூட நாங்கள் குறை சொல்ல மாட்டோம். நீதியரசர் எல்லாத்தையும் தாண்டி மேலே இருக்கக் கூடியவர்கள். ஆனால் இந்த விஷயத்துல பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கக்கூடாது. ஒரு நீதியரசராக இருந்தாலும் கூட அந்த கிராவிட்டி ஆஃப் வேர்ட்ஸ். அவரது வார்த்தைக்கு ஒரு மரியாதை இருக்கிறது. வார்த்தைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. வார்த்தைக்கு ஒரு கம்பீரம் இருக்கிறது. இன்றைக்கு நீதியரசர் குடும்பத்தை எல்லாம் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவருடைய தாயார் திமுக சட்டமன்ற உறுப்பினராக இதற்கு முன்பு பொறுப்பில் இருந்திருக்கிறார்.
நீதியரசர் எல்லாவற்றையும் தாண்டி மேலே இருக்கக்கூடிய ஒரு நபர். அதே நேரத்தில் நீதியரசர் அவர்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளும் கூட தன்மையாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் எஸ்ஐடி இருக்கிறது. இன்னொரு பக்கம் எஃப் ஐ ஆர் போட்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இன்வெஸ்டிகேஷன் நடந்துகொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது ஒரு பிரிமனரி பெட்டிஷனில் நீதியரசராக இருந்தாலும் கூட, ஒரு கருத்து சொல்வது சரியாக இருக்குமா? என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, இது பாஜகவின் கருத்துக்கள் அல்ல. எஸ்ஐடி இன்வெஸ்டிகேஷன் நடந்து முடியவில்ல. யார் தவறு செய்தார்கள் என்று நமக்கு தெரியாது. ஃபெயில் பெட்டிஷன் நிராகரிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.
சிபிஐக்கு போக வேண்டும் என்று ஒரு பெட்டிஷன் போயிருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் சில கருத்துக்களை சொல்லும் பொழுது இன்வேஸ்டிகேஷன் விசாரணை இல்லாமல் மேல் மட்டத்தில் யாராக இருந்தாலும் கருத்து சொல்ல முடியுமா? என்பது தனிப்பட்ட வகையில் என்னுடைய கேள்வி. அப்படி இருந்தும் நீதி அரசர் எல்லாவற்றைவிட தாண்டி மேலே இருக்கக் கூடியவர். அவருடைய கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
இந்தியா முழுவதும் நீங்கள் பார்த்தால் எதிர்கட்சியாக இருந்தாலும் கூட, எப்படி மத்திய அரசை பயன்படுத்தி அந்த மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு மத்திய அரசை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லாருமே பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் மத்திய அரசை எதிரியாக கருதி நம்முடைய முதலமைச்சர்கள் பேசக்கூடிய பேச்சுக்கள் இருக்கிறது. அவர்கள் செய்த தப்பை மறைப்பதற்காக ஆரோக்கியமாக எந்த விஷயத்தையும் இதுவரை பேசாமல், எல்லாத்தையும் மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். இன்றைக்கு அவர்கள் போராடி ஆளுநரை மாற்ற முடியுமா? ஆளுநர் என்கிற ஒரு பொறுப்பை இல்லாமல் செய்துவிட முடியுமா? முடியாது. ஆகவே திமுகவை பொறுத்தவரை மக்களை வேண்டும் என்றால் தூண்டிவிட்டு மக்களிடம் ஒரு போராட்டம் நோக்கத்தை தேவையில்லாமல் உருவாக்குகிறார்கள்.
இது ஆளுங்கட்சி செய்ய வேண்டிய வேலை இல்லை. ஆளுங்கட்சி எல்லாவற்றையும் அனுசரித்துத்தான் போக வேண்டும். கவர்னர் அதன் அடிப்படையில் கேள்வி கேட்டு இருக்கிறார். ஆகையால் முதலமைச்சர் மீண்டும் கவர்னரிடம் கேள்வி கேட்கிறார். இது நமது நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு முதலமைச்சர் கவர்னரைத் தொடர்ந்து இழிவுசெய்து கொண்டிருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது எனது கருத்து.
விஜய் மீது வழக்கு போட்டு அக்கியூஸ்ட் நம்பர் ஒன் ஆக்க முடியாது. கொஞ்சமாவது சட்டம் தெரிந்த யாராவது வந்தாலும் கூட சொல்வேன். வழக்கு போட்டு அக்கியூஸ்ட் நம்பர்-1 விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கரூர் விவகாரத்தை பொருத்தவரை நாம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்கு போட்டு அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்று சொன்னால் அது நிற்காது. அல்லு அர்ஜுனுடைய வழக்கில் ஹைதராபாத்தில் இதே தான் நடந்தது. அதேதான் இங்கும் நடக்கும். சும்மா அவர்கள் அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம், ஒரு இரவு சிறையில் வைக்கலாம். அடுத்த நாள் ஃபெயில் கிடைத்து வெளியில் வரலாம் என்பதெல்லாம் சின்ன பிள்ளைகள் ஆடுகின்ற விளையாட்டுக்குச் சமம்.
இன்றைக்கு அரசு உறுதியாக இருந்தால் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் ஆரம்பித்து, கூட்டத்திற்கு அனுமதி வாங்கிய நிர்வாகிகள் மீது தவறி இருக்கிறதா? அனுமதி கொடுத்த அதிகாரிகள் சரியாக கொடுத்தார்களா? இவர்கள்தான் சம்பந்தப்பட்டவர்கள். நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைத்த பிறகு நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம். ஏன் முதலமைச்சர் செல்லக்கூடிய நிகழ்ச்சி எத்தனை நடக்கிறது? அப்படியானால் ஒவ்வொரு அனுமதியும் முதலமைச்சருக்கு தெரியுமா? என்றால் தெரிந்திருக்காது. பிரதமர் வரக்கூடிய நிகழ்ச்சிக்கு தெரிந்திருக்குமானால் தெரிந்து இருக்காது. நம்பிக்கையில் வருவதுதான்.
தவெக மீது தவறுகள் இருக்கிறதா என்றால் தவறுகள் இருக்கிறது. சில விஷயங்களை அவர்கள் சரியாக செய்திருக்க வேண்டும். ஆனால் விஜயை குற்றவாளிபோல நடத்த வேண்டும் என நினைத்தால் முடியவே முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர். நாளைக்கு திருமாவளவனின் கட்சியில் இதேபோல் கூட நடக்கக் கூடாது. ஒரு வழி நடந்து விட்டால் நான் திருமாவளவனுக்கும் ஆதரவாக நிற்பேன். காரணம் அவரை கைது செய்வீர்களா? அவரை பொறுப்பாக கூறுவீர்களா? இல்லை. அதை ஒருங்கிணைத்தவர்களின் பொறுப்பு.
திருமாவளவன் கட்சியில் பெரும்பாலானோர் வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கிறார். வேறு வேறு கட்சிக்கு செல்கிறார்கள். அந்த வயிற்று எரிச்சலில் தான் திருமாவளவன் வெளியில் வந்து திடீரென விஜய் பற்றி தாக்குவதோ, மத்திய அரசின் மீது தனது விமர்சனத்தை கடமைப்படுத்துவதோ அப்படித்தான் நடக்கிறது. நாங்கள் யாருமே தவெகவையோ, விஜயையோ பாதுகாக்க வேண்டிய கடமை இல்லை. நியாயத்தை நியாயமாக பேசுகிறோம். தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியால் நசுக்கப்படும்போது நாங்கள் கருத்து சொல்கிறோம். தவெகவை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுங்கள். ஆனால் தலைவர்களை நசுக்கப் பார்க்க கூடாது என கருத்து சொல்கிறோம்.
அதற்காக நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறோம் என்று சொல்வதெல்லாம் தவறு. இன்றைக்கு இவர்கள் போட்டிருக்கக்கூடிய எஃப்ஐஆரில் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது பாஜக, தவெகவுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்பதை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.