டாஸ்மாக்கும், தவெகவும் ஒண்ணுதான்..! ரெண்டுலயும் சாவுதான்..! சீமான் கம்பேரிசன்..!

Published : Oct 06, 2025, 12:02 PM IST

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை வழிநடத்தும் தகுதி இபிஎஸ்க்கு இல்லை என்று விமர்சனம் செய்த விஜய்க்கு அதிமுகவும் ஆதரவு கொடுக்கிறது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் இவர்கள் பேசியதை திரும்பப் பெறுவார்களா?. 

PREV
14

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் குடிடதது சாகிறான், மற்றொரு பக்கம் கூத்தாடியை பார்த்து சாகிறான் என டாஸ்மாக்குடன் தவெக தலைவர் விஜயை ஒப்பிட்டு தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேசியுள்ளார்.

"பாசிச கட்சி என்று விமர்சித்த விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை வழிநடத்தும் தகுதி இபிஎஸ்க்கு இல்லை என்று விமர்சனம் செய்த விஜய்க்கு அதிமுகவும் ஆதரவு கொடுக்கிறது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் இவர்கள் பேசியதை திரும்பப் பெறுவார்களா?.

24

இன்னைக்கு மக்களின் பிரச்சனையை, மக்களின் வலியை இதயத்தில் இருந்து மொழியாக எடுத்துப் பேசத் தெரியாதவன் எப்படிடா இந்த நிலத்துல தலைவனாக இருக்க முடியும்? ஒருவர் துண்டு சீட்டு... மீதி மூன்று பேரும் முழுச்சீசிட்டு. இளமை புகுத்து என்றால் இன்மை புகுத்து என்று வாசிப்பார் ஒருவர். இன்னொருத்தன் வந்திருக்கிறான்... நம் உடன் பிறந்தவன். பின்னால் இருந்து பேப்பர் எடுக்கிறான். மண்ணரிப்ப்பு என்றால் மீன் அரிப்பா என்கிறான். நீடாமங்கலமா? பீடாமங்கலம் என்று வாசிக்கிறான்.

34

வடிவேல் செல்வது போல் பாரதிராஜாவா? பாரதியாரா? அவரே கன்பியுஸ் ஆகிவிட்டார் என்பது போல... நாமக்கல் வரவில்லை.. சென்னை மாகாணம் வரவில்லை. மகாணாமாகிவிடுகிறது. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்துவிட்டது. வசமாக சிக்கிக் கொண்டோம் என்பது மட்டும் தெரிகிறது. காலம் காலமாக வஞ்சித்து, வீழ்த்தி, ஏமாற்றி வருகிறார்கள். எதையாவது திராவிடர்களிடம் போய் பேசுங்கள். பக்கத்து வீட்டு மாடு கண்ணு குட்டி போட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அவர்கள் பெரியார் தான் அதற்கு காரணம் என்பார்கள். ஒரு அக்காவுக்கு ஒரே பிரசவத்தில் நாலு குழந்தைகள் பிறந்தது என்றால் அதற்கும் பெரியார் தான் காரணம் என்பார்கள்.

44

நாம் என்னமோ அம்மணமாக திரிந்தது போல், அவர்கள் வந்து தான் கோவணம் கட்டி விட்டது போல் பேசுவார்கள். ஐயா ராமசாமி என்கிற பெரியார் உட்கார்ந்து இருக்கிற போது பக்கத்துல பேரறிஞர் அண்ணா இருந்தார். ரெண்டு எம்.ஏ முதுகலை பட்டம் பெற்றவர். அன்பழகன், நெடுஞ்செழியன் முதுகலை படித்துவிட்டு ஆகச் சிறந்த அறிவாளிகள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை யார் படிக்க வைத்தது?’’ என கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

Read more Photos on
click me!

Recommended Stories