செங்கோட்டையன் முன்வைத்த 10 நாட்கள் கெடு முடிவு, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், பாஜக-அதிமுக கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளோடு அண்ணாமலை குறித்து அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பற்ற வைத்த விவகாரம் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கு திமுக அமைச்சர்களுடன் இருக்கும் தொடர்புகள் குறித்த ஃபைல்களையும் கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து அமித் ஷாவிடம் எடுத்துச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக ஒன்றிணைய வேண்டும் என டிடிவி.தினகரன், ஓபிஎஸ் பேசுறது எல்லாமே அண்ணாமலை தூண்டுதல்தான். அவர் சொல்கிறபடி தான் இவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அண்ணாமலையால் தான் முன்பு பாஜக கூட்டணியில் இருந்தே அதிமுக விலகியது உங்களுக்கு தெரியும். நீங்களும் மாநில தலைவர் பதவியில் இருந்து அவரை மாத்தினீங்க. அதனால்தான் நாங்களும் கூட்டணியில இணைந்தோம். இப்போது அண்ணாமலைக்கு பதவியே இல்லாத நிலைமையிலும் அதிமுகவுக்கு எதிராக ரொம்பவே பிரச்சினைகளை தூண்டிவிடுகிறார்.