நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அமித் ஷாவிடம், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் மீது உள்ள வழக்குகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி மீதான கார் வழக்கு, டாஸ்மாக் வழக்கு மணல் கொள்ளை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.