டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் என்ன நடந்தது என்று குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் ஆங்கில ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ‘‘அதிமுகவில் அணிகள் இணைப்பு சம்பந்தமாக அந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்படும் டிடிவி. தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டால் அதிமுக வலிமையாக இருக்கும். அதிமுக மீண்டும் பழைய வலிமையோடு தேர்தலை சந்தித்தால் தான் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் வெற்றி பெறுவது கடினம்.