ஏற்கனவே அந்த கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாரய சம்பவமாக இருந்தாலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்காக இருந்தாலும் இது போன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த பலபேர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கருதக்கூடிய வழக்குகளில் என்று அரசியல் கட்சிகள் கேட்பது வழக்கம். அதற்கு காரணம் காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் எங்களுக்கு போதுமான பதில் கிடைக்காது என்று அவர்கள் நினைப்பார்கள். தவெகவுக்கு அனுமதி கொடுத்தது காவல்துறை, பாதுகாப்பு கொடுத்தது காவல்துறை. எனவே தவெக தொண்டர்களை பொறுத்தவரையில் காவல்துறையினர் போதுமான ஒத்துழைப்பு ஆரம்ப காலத்தில் இருந்து எங்களுக்கு கொடுக்கவில்லை என்கிற வாதத்தை முன்வைத்து வருகிறார்கள்.
அதே போல அவர்கள் நாங்கள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுகின்றோம் எனக்கூறி எங்களை ஒடுக்கப் பாக்கிறார்கள் என தவெக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. தவெகவின் நேரடி குற்றச்சாட்டு என்னவென்றால் தமிழக காவல்துறையினர் இதனை விசாரித்தால் நன்றாக இருக்காது. அந்த காவல்துறை அதிகாரிகள் விசாரித்தால் எப்படி சரியானதாக இருக்கும்? எங்களுக்கு நியாயம் கிடைக்காது, உரிய தீர்வு கிடைக்காது. அதனால், மத்திய சிபிஐ இதனை விசாரித்தால் இதில் தமிழ்நாடு காவல்துறை உட்பட அனைத்து தரப்பையும் அவர்கள் விசாரிப்பார்கள்.