இந்தியாவை மீட்கத்துடிக்கும் ஸ்டாலின்..! ‘ராஜீவ் காந்தியை கொன்றவரை கொஞ்சுவது மட்டும் நியாயமா..?’

Published : Oct 03, 2025, 01:07 PM IST

மகாத்மா காந்தியின் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே பொய் சொல்லிக் கொண்டுள்ளார். 

PREV
13
இந்தியாவை மீட்க வேண்டும்!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி’’ எனத் தெரிவித்து இருந்தார்.

23
வேண்டுமென்றே பொய் சொல்லும் ஸ்டாலின்..?

மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பலரும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். ‘‘இந்த ஆர்.எஸ்.எஸ் விஷயத்தை எதிர்க்கும் அதே வேளை, 70 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கிடைத்தும், கொஞ்சம் கூட மக்களை அரசியல் படுத்தாமல், திராவிட மாடல்/கட்சி தலைவர்களுக்கு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிடுவதையும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மதத்தை வைத்து மக்களை பிரித்து, இஸ்லாமிய- கிருஸ்துவ பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துகூறி இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் மதவாத அரசியல் செய்யும் திராவிட மாடல் அரசிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும்.

காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து திமுக பத்தாண்டு காலம் கொள்ளை அடித்தது மக்களுடைய வரிப்பணத்தை சுரண்டியது. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத தலைவராக ஊழல், கொள்ளை, சட்டம்- ஒழுங்கு பிரச்சனையால் மக்களுக்கு நிம்மதி இல்லை. இவர்தான் இந்தியாவை காப்பாற்ற போகிறாரா? காந்தியின் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே பொய் சொல்லிக் கொண்டுள்ளார்.

33
பிரதமரை கொன்றவனை வாரி அனைக்கும் கூட்டம்

திமுகவால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நம் தேசப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை கொன்றொழித்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்த பேரறிவாளன் போன்ற ஆயுட்கைதிகளை சிறையில் இருந்து மீட்கப் போராடி, வெளிவந்தவுடன் ஆரத்தழுவிய மு.க.ஸ்டாலின் போன்றவர்களிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். பிரதமரை கொன்றவனை வாரி அனைத்து கொண்ட கூட்டம் நீங்கள்’’ என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories