எந்த காங்கிரசை எதிர்த்து திமுக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை காங்கிரஸுடன் தான் தற்போது பல ஆண்டுகளாக கூட்டணி அமைத்து வருகிறது. மேலும் பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதும், போவதுமாக இருந்து வருகின்றன. ஆனால், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அமைந்த கூட்டணி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக வலுவாகவே இருந்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தாவாக மற்றும் சில அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல்களை கடந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணியுடன் தொடர்கிறது திமுக.