ஸ்விக்கி, ஜெப்டோ, பிளிங்கிட்
சொமொட்டோ மட்டுமில்லை இந்தியாவில் ஸ்விக்கி, ஜெப்டோ, பிளிங்கிட் , Swish, Zing மற்றும் Ola Dash போன்ற புதிய நிறுவனங்களும் அதிவேக உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வருகின்றன. சொமொட்டோவுக்கு பிரதான போட்டியாளராக திகழும் ஸ்விக்கி, 15 நிமிட உணவு விநியோக சேவையை செயல்படுத்துவதற்காகவே Snacc என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக Bolt என்ற செயலி மூலம் விரைவு உணவு விநியோக சேவையை ஸ்விக்கி செயல்படுத்திய நிலையில், இப்போது Snaccம் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. Zomato வின் விரைவு வர்த்தகப் பிரிவான பிளிங்கிட் 10 நிமிடங்களில் உணவு விநியோகம் செய்யும் சேவையை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் அதன் கடைகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறது.
இதேபோல் ஜெப்டோவும் விரைவு உணவு விநியோக சேவையை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் அதன் கபேக்களில் இருந்து குறைவான துரங்களில் உணவு சேவையை விநியோகம் செய்து வருகிறது.