
'டீ' உலகம் முழுவதும் மிகவும் விரும்பி குடிக்கும் ஒரு பிரபலமான பானம் ஆகும். அதிலும் குறிப்பாக நம்முடைய நாட்டில் டீயை விரும்பி குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் டீ குடிக்க தான் விரும்புவார்கள். சிலர் ஒரு கப் டீ குடிக்காமல் தங்களது நாளை தொடங்க மாட்டார்கள். இதை டீக்கு அடிமை என்று கூட சொல்லலாம். இருப்பினும் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது உடல் நலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றை தவிர்க்க நீங்கள் பால் டீக்கு பதிலாக லெமன் டீக்கு மாறலாம்.
ஆம், லெமன் டீ குடித்து உங்களது நாளை தொடங்கினால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 வைட்டமின் இ போன்ற பல ஆரோக்கியமான பண்புகள் நிறைந்துள்ளன. லெமன் டீ உங்களது உடலுக்கு மனதுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது புத்துணர்ச்சியூட்டும் பானம் என்பதால் இது எந்த நேரத்திலும் உங்களது மனதை மேம்படுத்தும். இது தவிர, லெமன் டீயானது பல ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கு நன்மைகளை வாரி வழங்குகின்றது. இப்போது லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இஞ்சி டீயா? இல்லங்க.. இலவங்கப்பட்டை 'டீ' குடிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு தான் இவ்ளோ நன்மைகள்!!
தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்:
குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை புண் காய்ச்சல் ஆகியவை பெரும்பாலும் நம்மை தொந்தரவு செய்யும். இத்தகைய சூழ்நிலையில், லெமன் டீயுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில், எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:
எலுமிச்சையில் இருக்கும் தாவரப் ஃபிளாவனாய்டுகள், உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது. எனவே தினமும் காலை ஒரு கப் லெமன் டீ குடித்து வந்தால் இதய ஆரோக்கிய மேம்படும்.
உடலில் நச்சுக்களை நீக்கும்:
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகின்றது. எனவே தினமும் காலை ஒரு கப் டீ குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்க நீங்கும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகின்றது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
லெமன் டீ இன்சுலினைக் கட்டுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கும். இதுதவிர,
இந்த டீயானது பசியையும் கட்டுப்படுத்தும். மேலும் லெமன் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!
சருமத்திற்கு நன்மை பயக்கும்:
லெமன் டீயில் இருக்கும் அஸ்ட்ரிஜிங் பண்புகள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்ய உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, முகப்பரு அலர்ஜி, சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகளை திறம்பட சமாளிக்க உதவும். மொத்தத்தில் லெமன் டீ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எடையை குறைக்க உதவும்:
அதிகரித்திருக்கும் உங்களது எடையை குறைக்க விரும்பினால், தினமும் காலையில் லெமன் டீ குடிப்பது ஒரு நல்ல தேர்வாகும். ஏனெனில் இதில் இருக்கும் பல பண்புக,ள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, எடையையும் குறைக்க உதவுகின்றது.