World Forest Day 2025 : இன்று உலக வன நாள்! காடுகளை காக்காவிட்டால் என்னாகும் அடுத்த தலைமுறை?
இன்று உலக வன தினம் என்பதால், காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இன்று உலக வன தினம் என்பதால், காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
World Forest Day 2025 : காடுகள் நம் வாழும் பூமியின் உயிர்நாடியாகும். இது பல மில்லிய கணக்கான மக்களுக்கு ஆக்சிஜன், உணவு, மருந்து மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகின்றது. அவை சுற்றுச்சூழல் முக்கியத்துவத்திற்கு அப்பால் உலக அளவில் காடுகள் பாதுகாப்பின் தூண்களாக கருதப்படுகிறது. காடுகள் பழங்கள் விதைகள் வேர்கள் போன்ற அத்தியாவசிய பலன்களை நமக்கு வழங்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி காடுகளைக் கொண்டாடவும், மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சர்வதேச வன தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டில் காடுகளின் முக்கிய பங்கு கொண்டாடவும், அவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 21ஆம் தேதியே சர்வதேச வன தினமாக அறிவித்தது.
நாம் பயன்படுத்தும் புத்தகம் கட்டும் வீடு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மரங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பருவநிலை மாற்றம் காடுகள் அழிப்பு போன்றவற்றால் காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். எனவே அவற்றின் முக்கியத்துவத்தை நம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். காடுகள் புவியியல் வாழ்வை எவ்வாறு சமநிலைப்படுத்த உதவுகின்றன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் டிரெக்கிங்க்கு திடீர் தடை.! சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஷாக் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளில் சர்வதேச பல தினம் கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'காடுகள் மற்றும் உணவு'. காடுகளுக்கும் உலகளாவிய உணவு பாதுகாப்பிற்கும் இடையிலான ஆழமான தொடர்பை வலியுறுத்துகிறது என்பதுதான் இதன் அர்த்தம்.
இதையும் படிங்க: வனத்துறையில் 72 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி! தேர்வு எப்போது?
நாம் வாழும் இந்தியாவில் காடுகள் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் பல்லுயிர் ஆழமாகவே பின்னிப்பிணைந்துள்ளன மேலும் காடுகள் குறித்த பாதுகாப்பு ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டும் அல்ல ஒரு அடிப்படை பொறுப்பு. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவை இந்திய அரசின் தொடர்புடைய அம்சங்கள் காடுகளை உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களுடன் இணைக்கும் பல்வேறு திட்டங்களையும் தொடங்கியுள்ளது.
காடுகள் பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது என்பதால் இந்த நாளில் மட்டும் அவற்றை குறித்து நாம் பேசக்கூடாது எல்லா நாளிலும் அவற்றை குறித்து பேச வேண்டும். குறிப்பாக எதிர்கால சந்ததியினருக்கு முக்கிய வழங்கலான காடுகளை பாதுகாப்பதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பு முயற்சிகள் சமூக அர்ப்பணிப்பு மற்றும் நிலையான கொள்கைகளுடன் ஒருங்கியது பசுமையான ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு காடுகள் நாம் பாதுகாப்போம்!!