How To Clean Bathroom Tiles : என்னதான் நாம் பாத்ரூமை கை வலிக்க தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஓரளவு மட்டுமே பளிச்சென்று மாறும். பாத்ரூமில் அதிகமாக தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் பாத்ரூம் டைல்ஸ் பளிச்சின்னு ரொம்பவே கஷ்டம் தான். காரணம் தண்ணீரில் உப்பு இருப்பதால் அது டைல்ஸில் படிந்து உப்பு கறையாக மாறிவிடும். பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வதற்கு சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதனால் எந்த பயனும் கிடைக்காது.
26
இத்தகைய சூழ்நிலையில், பாத்ரூமில் பல வருடங்களாக படிந்திருக்கும் உப்பு கறையை கை வலிக்காமல் சுலபமாக சுத்தம் செய்வதற்கு சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அது என்ன என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
36
மூலிகை எண்ணெய்
மூலிகை எண்ணெய் பாத்ரூமில் புதிய வாசனையை தருவது மட்டுமல்லாமல் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதில் இருக்கும் கிருமியை நீக்கவும் உதவுகிறது. இதற்கு நீங்கள் லாவண்டர் எண்ணெய் போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு எண்ணெயின் சில துளிகளுடன் சிறிதளவு வினிகர் சேர்ந்து கலந்து அதை பாத்ரூம் டைல்ஸ் தெளித்து பிறகு 20 நிமிடம் கழித்து சுத்தம் செய்ய வேண்டும்.
46
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா:
சமையல் சோடா மற்றும் எலுமிச்சை இவை இரண்டும் இயற்கையான சுத்தப்படுத்தியாகும். இவை டைல்ஸில் குவிந்திருக்கும் உப்பு கறைகளை எளிதாக அகற்ற உதவுகின்றன. இதற்கு ஒரு கப்பில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை டைல்ஸ் மீது தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு ஒரு ஸ்க்ரப் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இப்போது பார்த்தால் கறைகள் நீங்க பாத்ரூம் டைல்ஸ் பளிச்சுன்னு இருக்கும்.
அழுக்கை அகற்ற உதவும் ஒரு இயற்கையான அமிலம் வினிகர் ஆகும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சம அளவு வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இப்போது அதை பாத்ரூம் டைல்ஸ் மீது தெளித்து 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு பிரஷ்சால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைட் பாத்ரூம் டைல்ஸ்சில் குவிந்துள்ள அழுக்குகளை அகற்றும் மற்றும் கிருமிகள் நீக்கம் செய்யும் ஒரு இயற்கையான பிளீச் ஆகும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் நிரப்பி அதை பாத்ரூம் டைல்ஸ் மீது தெளித்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, பிறகு ஒரு பிரஷ்சால் சுத்தம் செய்ய வேண்டும்.