கையில் ஆறு விரல் இருந்தால் அதிர்ஷ்டமா? அதோட பின்னணி தெரியுமா?
இந்த பதிவில் கையில் ஆறாவது விரல் வரக் காரணம் என்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.
இந்த பதிவில் கையில் ஆறாவது விரல் வரக் காரணம் என்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.
Reason Behind 6 Fingers In Hand : மனிதனாக பிறந்த நம் அனைவருக்கும் கண், மூக்கு, வாய், கை, கால் என எல்லா உறுப்புகளும் இருக்கும். இருந்த போதிலும் சிலருக்கு ஒரு உறுப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கும். அது என்னவென்றால், சுண்டு விரல் அல்லது கட்டை விரல் பக்கத்தில் ஒரு விரல் நீண்டு இருக்கும். காலில் ஒரு விரல் அதிகமாக இருக்கும் நபரை அடங்காதவர் என்றும், அதுவே கையில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். இன்னும் சிலரோ துரதிஷ்டம் என்று சொல்லுவார்கள். சரி இப்போது இந்த ஆறு விரல் அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா? என்றும், இப்படி விரல் வர காரணம் என்ன என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நபருக்கு கையில் ஆறு விரல் இருந்தால் அதை Polydactyly என்று சொல்லுவார்கள் இந்த விராலானது சுண்டு விரல் அல்லது கட்டைவிரல் பக்கத்தில் இருக்கும். சிலருக்கு இந்த ஆறாம் விரலானது தொங்கியபடி இருக்கும். இன்னும் சிலருக்கோ நன்கு வளர்ந்து இருக்கும். மற்ற விரல்களைப் போலவே அதையும் மடக்கி நிமிர்த்தலாம். பாதியாக வளர்ந்திருக்கும் ஆறாம் விரலை மற்ற விரல்களைப் போல இருக்காது. சிறு சதை போல் காணப்படும்.
இதையும் படிங்க: விரல்ல சொடுக்கு போடும் பழக்கத்தை லேசுல நினைக்காதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்!!
கைகளில் ஆறு விரல் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், மரபணு தான். ஆம், மரபணு ரீதியாக ஒருவருக்கு இந்த ஆறாம் விரல் வரும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் தாத்தா, பாட்டி, தாய், தந்தை இவர்களில் யாருக்காவது கைகளில் ஆறு விரல் இருந்தால் அவர்கள் சன்னதிக்கும் கூடுதல் வரும்.
இதையும் படிங்க: உங்கள் காலின் விரல்களை பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிஞ்சுக்கலாம் தெரியுமா..?
ஒருவேளை மரபணு சார்ந்து ஆறாம் விரல் இல்லையென்றால், பிறக்கும்போதே உடலில் ஏதாவது குறைபாடு இருந்தால் ஆறாம் விரல் வர சாத்தியம். ஆனால் இது ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இப்படி நிகழும்.
உண்மையில், ஆறாம் விரலானது சுண்டுவிரலில் இருந்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை. அதுவே கட்டிவிரல் பக்கத்தில் இருந்தால் இடையூறுகளை கொடுக்கும். இந்த ஆறாம் விரலை அகற்ற வேண்டும் என்றால் அதற்குரிய சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே நீங்கள் ஒரு வேலை ஒருவேளை விரலை அகற்ற வேண்டும் என்றால், மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.