10 பிரைவேட் ஜெட்; ரூ.420 கோடி சொத்து மதிப்புடன் வாழும் பெண்! யார் தெரியுமா?

First Published | Aug 28, 2024, 12:18 PM IST

இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக வைத்திருக்கும் கனிகா டெக்ரிவால் என்ற பெண்ணின் வெற்றிக் கதை ஊக்கமளிக்கிறது. 420 கோடி சொத்து மதிப்புடன், புற்றுநோயை வென்று ஜெட்செட்கோ நிறுவனத்தை நிறுவிய அவரது பயணம், இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

Kanika Tekriwal

சமீப காலமாக இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பெண்கள் பொருளாதாரத்திற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், மற்ற பெண்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகின்றனர்.

Kanika Tekriwal

இதற்கு பல பெண்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில், 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக வைத்திருக்கும் ஒரு பெண் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஆம் அவர் வேறு யாருமில்லை. கனிகா டெக்ரிவால் தான். அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Kanika Tekriwal

பட்டய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கும், நிர்வகிக்கும் மற்றும் பறக்கும் விமான ஒருங்கிணைப்பு ஸ்டார்ட்அப் ஜெட்செட்கோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருக்கிறார். இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.420 கோடி என்று கூறப்படுகிறது..

Kanika Tekriwal

22 வயதில், கனிகா டெக்ரிவால் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பிறகு தனது சொந்த விமான அடிப்படையிலான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தார். அவரின் நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. இப்போது அவர் 10 தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கிறார்.

Kanika Tekriwal

விமானக் குத்தகைத் துறையில் இந்தியாவின் முன்னோடியான JetSetGo, 100,000 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. 6,000 விமானங்களை வெற்றிகரமாக இயக்கிய சாதனையுடன், நிறுவனம் இந்தத் துறையில் ஒரு வலுவான அடையாளத்தை கொண்டுள்ளது.

Kanika Tekriwal

1990 ஆம் ஆண்டு மார்வாரி குடும்பத்தில் பிறந்த கனிகா டெக்ரிவால் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மேலும் போபாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மூத்த மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.  2012 ஆம் ஆண்டு JetSetGo நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் தனது தொழில் முனைவோர் பயணத்தை தொடங்கினார்.

Kanika Tekriwal

சுவாரஸ்யமாக, ஹுருன் பணக்காரர் பட்டியலில் உள்ள இளம் பணக்கார பெண்களில் இவரும் ஒருவர். கனிகாவுக்கு 20 வயதிலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் போராடி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார்.கனிகா தனது வணிகத் திறமைக்காக இந்திய அரசாங்கத்தின் தேசிய தொழில்முனைவோர் விருது மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

Latest Videos

click me!