Winter Pregnancy Tips : கர்ப்பிணிகளே! தாயும், சேயும் நலமாக இருக்க குளிர்காலத்துல ஃபாலோ பண்ண வேண்டியவை இவைதான்!

Published : Nov 19, 2025, 05:12 PM IST

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
17
Winter Pregnancy Tips

குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. கர்ப்பிணிகளுக்கு இந்த சீசன் சற்று சவாலானது தான். ஏனெனில் வறண்ட காற்று மற்றும் நோய்கள் நோய்கள் அபாயம் அதிகரிப்பது இந்த பருவத்தில் தான். எனவே, கர்ப்பிணிகள் இந்த பருவத்தில் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் சளி, இருமல், காய்ச்சல் அல்லது வேறு சில உடல்நல பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் தங்களது உடல் நலத்தை எப்படி எல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

27
குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

1. அதிகமாக தண்ணீர் குடியுங்கள் ;

பொதுவாக குளிர்காலத்தில் தாகம் எடுக்காது. எனவே நாம் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவோம். ஆனால், எந்த சீசனாக இருந்தாலும் கட்டாயம் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக குளிர்ந்த காற்றினால் உடலானது வறட்சியாகிவிடும் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே கர்ப்பிணிகளே முடிந்தவரை அதிகளவு தண்ணீர் குடியுங்கள்.

37
2. ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல் :

குளிர்காலத்தில் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே இந்த சீசனில் வெளியே கூடிய பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் சிலருக்கு சளி, இருமலை ஏற்படுத்தும். எனவே அத்தகைய பழங்களை தவிர்க்கவும். அதுபோல குளிர்காலத்தில் சூடான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

47
3. உடற்பயிற்சி :

கர்ப்பிணிகளே குளிர்காலத்தில் உங்களால் வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் வீட்டிற்குள்ளேயே மிக எளிதான உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதுவும் மருத்துவர் ஆலோசனையின் படி செய்யவும்.

57
4. தடுப்பூசி ;

கர்ப்பிணிகளுக்கு குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக குறைந்து விடும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடனே தாக்கிவிடும். எனவே கர்ப்பிணிகள் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க கட்டாயம் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். அதற்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள்.

67
5. மாஸ்க் போடுங்கள் :

கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ் அணியவும். அடிக்கடி கைகளில் கழுவும். இது தவிர பொது இடங்களில் ஏதேனும் தொட்ட பிறகு அல்லது கைகுலுக்கிய பிறகு உடனே ஹேண்ட் வாஷ் கொண்டு கை கழுவி விடுங்கள். இது தவிர சளி, இருமல் உள்ளவர்கள் பக்கத்தில் உட்காருவதை தவிர்க்கவும்.

77
6. வசதியான ஆடை :

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் உடல் சூடாக இருக்கும் வசதியான ஆடைகளை அணியவும். கால்களை மூடி வைப்பது நல்லது. சூடான அறையிலே இருக்கவும். குளிர்ந்த காற்று உள்ள இடத்திற்கு செல்வதை தவிர்ப்போம். இல்லையெனில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகி தொற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories