
பூண்டு நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பூண்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பருவ கால தொற்றுகள் வருவதை தவிர்க்கலாம். பூண்டு உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், பூண்டின் முழு நன்மைகளைப் பெற அதை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டசியம், இரும்புச்சத்து, காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை அதிகமாக உள்ளன.
உங்களது உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு சில பூண்டுகளை பச்சையாக சாப்பிடுங்கள். இது இதய குழாயில் கொழுப்பு அடைப்பதை தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மேலும் பச்சைப்பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் பண்பு இரத்தத்தை மெலிதாகும் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு பச்சை பூண்டு சாப்பிட பிடிக்கவில்லை என்றால் இரவு தூங்கும் முன் பூண்டை தண்ணீர் ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை குடித்தாலும் இதய ஆரோக்கிய மேம்படும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால் பூண்டு தேநீர் குடிக்கலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பூண்டு முழுவதையும் தட்டி போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் 1/2 ஸ்பூன் பட்டத்துள் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதை இறக்கி வடிகட்டி அதனுடன் 1 ஸ்பூன் மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் ஆரோக்கியமான பூண்டு தேநீர் தயார்.
பூண்டில் சூப் தயாரிப்பதற்கு, கோழியின் நெஞ்சுக்கறியை ஒன்று வாங்கி அதை நன்கு கழுவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் வெண்ணெய், 4 ஸ்பூன் நறுக்கிய பூண்டு பற்கள், நறுக்கிய வெங்காயம் ஒன்று ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் 4 ஸ்பூன் மிளகு, சிறிதளவு பார்லி சேர்த்து கொள்ளுங்கள். இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, 4 முழு பூண்டு பற்கள், நறுக்கிய ஒரு சின்ன துண்டு இஞ்சி சேர்ந்து நன்றாக வதக்கவும் இப்போது அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும் குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிக்கன் பூண்டு சூப் ரெடி.
மேலே சொன்ன வழிமுறைகளின் படி பூண்டை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதன் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம்.