
பசும்பால் குடிப்பது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகிறது. பசும் பால் அளவிற்கு எருமைப் பால் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை. முன்பு மக்கள் பாலை வாங்கி அதை காய்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம் வாங்கியதும் பிரிட்ஜில் வைத்திவிட்டு தேவைப்படும் போது பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அவ்வளவு நல்ல நடைமுறை அல்ல.
ஒருவேளை பசுவுக்கு அல்லது அந்த எருமைக்கு ஏதேனும் தொற்று இருந்தால் அதனுடைய வைரஸ் பாலிலும் இருக்கும். நீங்கள் பாலை சரியாக காய்ச்சாமல் அல்லது பாலை வாங்கி அப்படியே பிரிட்ஜில் வைக்கும் போது அந்த வைரஸ் உயிர்ப்போடு இருக்கும். அண்மையில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வில், காய்ச்சாத பாலை குளிரூட்டினால், அதில் காய்ச்சல் ஏற்படுத்தக் கூடிய வைரஸ் 5 நாட்கள் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: Milk: பாலை காய்ச்சாமல் குடிக்கலாமா? அப்படி குடித்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்..!..நிபுணர்கள் விளக்கம்....
வைரஸ் அபாயம்
குளிர்காலத்தில் காய்ச்சலை ஏற்படுத்தும், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சாத பச்சை பாலில் ரொம்ப நாள்கள் வாழும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பருவ காலங்களில் தொற்றுநோய் பரவுவது வழக்கமாகிவிட்டது. இந்நேரத்தில் மாடுகளில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. பசும் பால் அல்லது எருமை பால் எதுவாக இருந்தாலும் அதை நன்கு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாலை தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: பச்சை பாலில் முகம் கழுவுறவங்க '40' வயசானாலும் இளமையா இருக்கலாம் தெரியுமா?
பாலை ஏன் காய்ச்ச வேண்டும்?
காய்ச்சாத பச்சைப் பால் குடிப்பதால் பறவைக் காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதில் ஒருவேளை வைரஸ் இருந்தால் உங்களை தாக்கக் கூடும். பாலை கொதிக்க வைப்பது அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை நீக்கும் செயல்முறை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பச்சை பால் அருந்தினால் நோய்த்தொற்று வரலாம்.
பச்சை பாலில் சத்து அதிகமா?
காய்ச்சிய பாலை விட பச்சை பாலில் நிறைய ஊட்டச்சத்துகள், என்சைம்கள், புரோபயோடிக் இருப்பதாக சிலர் நம்புகின்றனர். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. காய்ச்சாத பாலை குடித்தால் 200 க்கும் மேற்பட்ட நோய்கள் வரக் கூடும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது. காய்ச்சாத பச்சை பாலில் ஈ. கோலை, சால்மோனெல்லா உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியாக்கள் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமானவர்களுக்கு நோய் உண்டாக்கும் அபாயம் உள்ளது. ஃப்ளூ வைரஸின் ஆர்என்ஏ 57 நாட்கள் வரை பச்சைப் பாலில் இருக்க வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாலை காய்ச்சும்போது வைரஸ் முற்றிலும் நீங்கும். பறவைக் காய்ச்சல் மாதிரியான நோய்த்தொற்று பரவும் நேரத்தில் காய்ச்சாத பாலை மறந்தும் குடிக்கக் கூடாது.