
வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது மட்டுமல்லாமல், அடிக்கடி சண்டையும் போட்டுக் கொள்வார்கள். எனவே, ஒரே ஒரு பிள்ளை இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அந்த குழந்தை மீது கொஞ்சம் அக்கறையாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த குழந்தைக்கு தனிமையுணர்வு வந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், ஒற்றைக் குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் அடிக்கடி சில தவறுகளை செய்கிறார்கள். இதனால் அந்த குழந்தை மிகவும் மோசமாக பாதிக்கப்படும். எனவே, ஒரு பிள்ளையை வளர்க்கும் பெற்றோர் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எதிர்பார்ப்புகளை திணிக்காதே!
பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது ஆசைகளை தங்களது பிள்ளைகள் மீதுதான் திணிப்பார்கள். இப்படி பெற்றோர்கள் குழந்தைகள் மீது அழுத்தம் கொடுப்பதால் அது அவர்களது வளர்ச்சியை மட்டுமல்ல, மனரீதியாகவும் குழந்தைகளை பாதிக்கும் தெரியுமா? ஆம், இதன் காரணமாக குழந்தை மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே நீங்கள் உங்கள் குழந்தையை புரிந்துகொண்டு, உங்களது விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பதை தவிர்ப்பது நல்லது.
தனிமை:
ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் அந்த குழந்தையைச் சுற்றி எப்போதும் குடும்பத்தினர் இருப்பார்கள். இதனால் அந்த குழந்தைக்கு தனிமையில்லாமல் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், குழந்தைக்கு சிறிது நேரம் தனிமை கொடுப்பது மிகவும் அவசியம். இதனால் அவர்கள் தங்கள் கூறிய நேரத்தை பிரயோஜனமாக செலவழிப்பார்கள். மேலும் உங்களுடன் செலவழிக்கும் நேரத்தின் மதிப்பையும் அறிந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: பெற்றோர் குழந்தைங்க கிட்ட 'எப்படி' நடந்துக்கனும்? முக்கியமான '5' டிப்ஸ்
குழந்தையின் முடிவை நீங்கள் எடுக்காதீங்க!
வீட்டில் ஒரு குழந்தை இருக்கும் போது அந்த குழந்தையின் வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் பெற்றோர்கள்தான் எடுக்க விரும்பினார்கள். ஆனால் அது தவறு. குழந்தைகள் தங்கள் வாழ்க்கை முடிவுகளை எடுக்க அவர்களுக்கு ஒரு காலம் வரும். எனவே அந்த சமயத்தில் குழந்தைகளின் முடிவுகளை பெற்றோர்கள் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், அது தொடர்பாக குழந்தையிடம் ஆலோசிக்கலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்துல குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுக்க கூடாது தெரியுமா?
முழு சுதந்திரம் கொடுங்கள்:
ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் பார்வை அந்த குழந்தையின் மீது எப்போதும் இருக்கும். அந்த குழந்தை எங்காவது வெளியே சென்றால் கூட அவர்களை வெளியே விடாமல் பெற்றோர்கள் தடுக்கிறார்கள் இதனால் அந்த குழந்தை சிறையில் இருப்பது போல் உணர ஆரம்பிக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். வேண்டுமானால், நீங்கள் உங்கள் குழந்தையை தூரத்தில் இருந்து கண்காணிக்கலாம்.
அதிக பாதுகாப்பு அவசியமில்லை:
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பாதுகாப்பது அவசியம் தான் ஆனால் பாதுகாப்பிற்கும், அதிக பாதுகாப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக வீட்டில் ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் குழந்தையின் சில விஷயங்களில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. மேலும் குழந்தைகளை தானாகவே முடிவெடுக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தங்களது சொந்தம் முடிவுகளில் எடுக்க ஆரம்பிக்கும் போது அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.