
காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. டீ அல்லது காபி குடிக்காமல் அந்த நாளை தொடங்க மாட்டார்கள். நாம் சோர்வாக உணரும்போதோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்போம். முக்கியமாக வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கூட முதலில் டீ கொடுத்து தான் அவர்களை வரவேற்போம். மேலும் பலருக்கும் அந்நாளில் டீ அல்லது காபி ஏதேனும் குடிக்கவில்லை என்றால் தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் அனுபவிப்பதாக கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால் டீ, காபி அவர்களது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் அதற்கு அவர்கள் அடிமையாகி விட்டன.
ஆனால் டீ, காபியில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக குடித்தால் வயிறு வலி, வயிற்று வீக்கம், அஜீரணம், வயிற்றில் அசெளகரியம் போன்ற உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று பெரும்பாலானருக்கும் தெரிவதில்லை. இது தெரியாமல் அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று நான்கு கப்புக்கு மேல் டீ அல்லது காபி குடிப்பார்கள். ஆனால் இவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் தெரியுமா?
இதையும் படிங்க: குளிருக்கு இதமா அடிக்கடி வெந்நீர் குடிக்குறீங்களா? இதை கொஞ்சம் மனசுல வச்சி குடிங்க
ஆம், டீ மற்றும் காபியில் இருக்கும் டானின் என்ற கலவை குடல் திசுகளை சேதப்படுத்தி வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, இவற்றை தடுக்க டீ, காபி குடிப்பதற்கு முன் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பாக கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். அது ஏன் என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: வாழைப்பழம் சாப்பிட்டு உடன் தண்ணீர் குடிக்கலாமா? தெரிஞ்சுக்க இதை படிங்க!
டீ, காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும்?
உடலில் பிஹெச் சமநிலை பராமரிக்கப்படும்:
டீ, காபி வயிற்றில் அமிலத்தை உருவாக்கும். எனவே அவற்றை குடிப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் பிஹெச் சமநிலை சரியாக பராமரிக்கப்படும்.
உடல் நீரேற்றமாக இருக்கும்:
அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபி குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், டீ காபி குடிக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.
பல் பிரச்சனைகள் வராது:
அதிகப்படியான டீ அல்லது காபி குடித்தால் பல் பிரச்சனைகள் உண்டாகும். ஏனெனில் காஃபினில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளதால், இது பல் சிதைவை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டீ அல்லது காபி குடிப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் பல் பிரச்சனைகள் வரவே வராது.
அல்சர் பிரச்சனை வராது:
வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடித்தால் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனுடன் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் காலையில் டீ அல்லது காபி குடிக்கும் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அதன் பிறகு தான் டீ, காபி குடிக்க வேண்டும். இப்படி செய்தால் அல்சர் பிரச்சனை மற்றும் நோய் தொல்லைகளில் இருந்து உங்களை காக்கும்.