
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது. அதிலும் வெறும் வயிற்றில் செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும். காலையில் எழுந்ததும் சிலர் ஏதேனும் பழங்கள் அல்லது கூழ் போன்றவை சாப்பிட்டு நடக்க செல்வார்கள். சிலர் காபி அல்லது டீயை அருந்துவார்கள். ஆனால் அப்படி செய்வதை விட வெறும் வயிற்றில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இந்த பதிவில் காணலாம்.
காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக சுறுசுறுப்பாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடலுக்கு நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு நேர்மறையான நன்மைகளை தரும். காலையில் சாப்பிடாமல் நடக்க செல்வது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதாவது வெறும் வயிற்றில் நீங்கள் சுறுசுறுப்பாக நடக்கும் போது அதற்கான ஆற்றலை உடலில் உள்ள கொழுப்பிலிருந்து பெறுகிறீர்கள். இதனால் உடலில் சேகரமாகும் கொழுப்பு சீக்கிரம் கரைந்து ஆரோக்கியமாம மாறுவீர்கள்.
இதையும் படிங்க: வெறும் 15 நிமிடம் வாக்கிங்.. எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வளர்சிதை மாற்றம்:
வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால் வளர்சிதை மாற்றம் மேம்படும். இதனால் நாள் முழுக்க நன்றாக செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை உணவிலிருந்து எடுத்து உடலுக்கு தரும் செயல்முறை மேம்படுகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கமுடியும்.
ரத்த சர்க்கரை அளவு சீராகும்:
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி பக்க விளைவுகளை அனுபவிப்பவர்கள், வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பயனளிக்கும். சாப்பிடும் முன் காலையில் நடைபயிற்சி செய்தால் இன்சுலின் உணர்திறன் மேம்படும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வெறும் வயிற்றில் காலை நடைபயிற்சி செய்வதால் இன்சுலின் எதிர்ப்பு கூடும். வகை 2 நீரிழிவு நோய் ஆபத்து குறையும்.
மன நலம் மேம்படும்!
காலையில் நடைபயிற்சி செய்வது அந்த நாளின் நல்ல தொடக்கமாகும். இது மனநலனை மேம்படுத்தி நாள் முழுக்க உற்சாகமாக இருக்க உதவும். உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்களின் அதிகமாக சுரக்கும். இதனால் மனச்சோர்வு, கவலை குறையும்.
இதய ஆரோக்கியம்:
தினமும் வெறும் வயிற்றில் நடந்தால் இதயம் ஆரோக்கியமடையும். ஏனென்றால் நடைபயிற்சி இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை நன்றாக வைத்துகொள்ள உதவும். தினமும் நடந்தால் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய் உங்களை அண்டாது.
செரிமானம் மேம்படும்!
நடைபயிற்சி மிதமான உடற்பயிற்சி. இதனால் செரிமானம் தூண்டப்படுகிறது. நடைபயிற்சி செய்யும்போது உடல் இயக்கத்தின் போது அடிவயிற்றில் இருக்கும் தசைகள் சுருக்கம் அடைகிறது. இதனால் செரிமான பாதை மூலம் உணவை நகர்த்தப்பட உதவியாக உள்ளது. செரிமான கோளாறு அல்லது வயிறு வீக்கத்தால் அவதிப்படுவர்கள் காலையில் நடக்கலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: காலை vs மாலை: எப்ப வாக்கிங் போறது எடையை குறைக்க உதவும்?