
காளான் ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். பலரும் காளானை விரும்பி சாப்பிடுவார்கள். இதன் விலை சற்று அதிகம் என்றாலும், இதில் ஊட்டச்சத்துக்கு குறைபாடில்லை என்று தான் சொல்ல முடியும். ஏனென்றால் இதில் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் குறிப்பாக குளிர்காலங்களில் காளான் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. காளானை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பொட்டாசியம், தாமிரம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, செலினியம் ஆகியவை அதிகமாகவே கிடைக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், காளான் ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு இது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் தெரியுமா? ஆம், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் அந்தப் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும் எனவே காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காளானை மழைக்காலத்துல சாப்பிடக் கூடாதுனு சொல்றாங்களே ஏன் தெரியுமா? உண்மை தெரிஞ்சா சாப்பிடமாட்டீங்க!
இந்த பிரச்சனை உள்ளவர்கள் காளான் சாப்பிட வேண்டாம்:
அடிக்கடி வயிற்றுப்போக்கு
உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நீங்கள் காளான் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கு அசெளகரியத்தை அதிகரிக்கச் செய்யும். இதுதவிர வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
சரும பிரச்சனை
காளான் சாப்பிட்டால் பலவித நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் உங்களுக்கு சரும பிரச்சனை ஏதேனும் இருந்தால் காளான் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சரும வெடிப்பு, சரும எரிச்சல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அடிக்கடி சோர்வு
நீங்கள் அடிக்கடி சோர்வாக உணரும் நபராக இருந்தால் காளான் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதாவது உடலில் ஆற்றல் பற்றாக்குறையை உணர்வீர்கள்.
ஒவ்வாமை
உங்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் நீங்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சரும வெடிப்பு, அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கீல்வாதம் & சிறுநீரக கற்கள்
காளான் கீழ்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். ஏனெனில் காளானில் இருக்கும் யூரிக் அமிலம் பிரச்சினையை அதிகரிக்க செய்யும். எனவே இந்த இரண்டு பிரச்சனை உள்ளவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் காளான் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது அவர்களுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். மீறி சாப்பிட்டால் அது கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: Weight Loss : உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்ற காளாண் உதவுமா? தெரிஞ்சுக்க இதை படிங்க
குடல் பிரச்சனை
உங்களுக்கு ஏதேனும் குடல் பிரச்சனை இருந்தால் நீங்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் குடல் வீக்கம், வாயு பிரச்சனை அதிகரிக்கும்.
கல்லீரல் பிரச்சனை
சில காளான்களில் நச்சுக்கள் இருப்பதால் அது கல்லீரலை மோசமாக சேதப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தால் நீங்கள் காளான் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.