
மழை, குளியல் காலங்களில் சின்ன குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் சருமம் ரொம்பவே மென்மையானது என்பதால், அவர்களை பராமரிப்பதில் மிகவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால் கூட அவர்களுக்கு எளிதில் சளி, காய்ச்சல், இருமல் வந்துவிடும். அதுவும் குறிப்பாக குளிர்ந்த காற்று படாமல் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்களுக்கு சூடான ஆடைகளை அணிவிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், மழை, குளிர் காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழை, குளிர் காலங்களில் குழந்தைகளை பராமரிக்கும் முறை:
1. குளிப்பாட்டுதல்:
இந்த பருவத்தில் குழந்தைகளை குளிப்பாட்டும் போது மிகவும் சூடான அல்லது குளிர்ந்த நீரில் ஒருபோதும் குளிப்பாட்ட வேண்டாம். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் மட்டுமே குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். முக்கியமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஒருவேளை குழந்தையை குளிப்பாட்டினால் சளி, இருமல், காய்ச்சல் வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தால் சூடான தண்ணீரில் ஒரு துணிய நனைத்து அதை வைத்து குழந்தையின் உடலை துடைக்க வேண்டும்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்றது ஆபத்து.. குழந்தையோட ஆரோக்கியத்தையே பாதிக்கலாம்!!
2. டயப்பர்:
மழை, குளிர் காலங்களில் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது வழக்கம். எனவே குழந்தைக்கு டயப்பர் அணிவது நல்லது. ஆனால் அதை நீங்கள் அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். அதுபோல சுமார் 4-5 மணி நேரத்திற்கு கண்டிப்பாக மாற்ற வேண்டும் இல்லையெனில் அதனால் குழந்தைக்கு புண்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிறைய பவுடர் போடும் தாயா நீங்க? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!!
3. குளிர்கால ஆடைகள்:
இந்த பருவத்தில் குழந்தைகளின் உடலை சூடாக வைக்க குளிர்கால ஆடைகளை அணிவிக்கவும். இதற்கு குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாமல் தவிர்க்க முதலில் பருத்தி ஆடையை அணிவித்து அதன் மேல் கம்பளி ஆடையை அணிவிக்கலாம். அதுபோல குழந்தைகளின் துணிகளை துவைக்கும் போது அதிக வாசனையுள்ள சோப்புகளை பயன்படுத்த வேண்டாம்.
4. எண்ணெய் மசாஜ்:
மழை, குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தினமும் எண்ணெய் மசாஜ் செய்வது ரொம்பவே நல்லது. இதன் மூலம் குழந்தையின் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் செயல்பாடுகள் சீராக நடக்கும், எலும்புகள் வலுவாகும். இதற்கு நீங்கள் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். மசாஜ் செய்வதற்கு முன் என்னையே லேசாக சுட வைத்து பிறகு குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய வேண்டும்
5. கொசு வலை:
மழை,குளிர் காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். எனவே குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் கண்டிப்பாக கொசுவலை பயன்படுத்த வேண்டும். அதுபோல, காலை சூரிய ஒளியில் குழந்தையில் குழந்தையை சிறிது நேரம் வைக்கவும் இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் வராமல் பாதுகாக்கப்படுவார்கள்.