Monsoon Tips in Tamil
மழைகாலத்தில் கொசுக்கள், பூச்சிகள், ஈக்கள் தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக, இரவு நேரத்தில் படுக்கையில் மூட்டை பூச்சிகள் நம்மை தூங்கவிடாமல் இரவு பாடாய்படுத்தும். மூட்டைப்பூச்சிகள் என்பது ரத்தத்தை உறியும் ஒரு சிறிய பூச்சியின வகையாகும். மூட்டை பூச்சிகள் பொதுவாக ஆடைகள், பெட்ஷீட்களில் தான் அதிகமாகவே வரும். முக்கியமாக, மூட்டை பூச்சிகள் ரொம்பவே சிறிதளவில் இருப்பதால் நம்முடைய கண்களுக்கு தென்படுவது அரிதுதான்.
Monsoon Bed Bugs in Tamil
அதுமட்டுமின்றி, நீங்கள் சில சமயம் காலை எழுந்தவுடன் உங்களுக்கு சருமத்தில் அரிப்பு அல்லது உங்களது தோளில் சிவப்பு புள்ளிகள் ஏதேனும் தென்பட்டால் அதற்கு முக்கிய காரணம் மூட்டை பூச்சிகள். எனவே மூட்டை பூச்சிகளுக்கு ரொம்பவே எச்சரிக்கையாக இருங்கள். பொதுவாக மூட்டை பூச்சிகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதால், பெரும்பாலானோர் அவற்றை விரட்ட இரசாயன பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை உடல் நலத்திற்கு கேடு. அதுவும் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருக்கும் வீட்டில் ரசாயன பொருட்கள் பயன்படுத்துவது நல்லதல்ல. இத்தகைய சூழ்நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சிகளை எந்தவித ரசாயனங்களுமின்றி, இயற்கையான வழியில் நிரந்தரமாக விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Bed bug removal during monsoon in tamil
மூட்டை பூச்சிகளை விரட்டி அடிக்க டிப்ஸ்:
பேக்கிங் சோடா:
மூட்டை பூச்சிகளை விரட்டுவதற்கு பேக்கிங் சோடா சிறந்த தேர்வாகும். இதை பயன்படுத்துவதன் மூலம் மூட்டை பூச்சிகள் இருக்கிற இடம் தெரியாமல் போகும். இதற்கு உங்களது மெத்தையில் பேக்கிங் சோடாவை தூவி விடுங்கள். பிறகு 3-4 நாட்களுக்கு அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு வெற்றிட கிளீனரை பயன்படுத்தி மெத்தையை சுத்தம் செய்யவும்.
இதையும் படிங்க: அரிசியில் வண்டு, பூச்சிகள் வராமல் தடுக்க சூப்பரான '4' டிப்ஸ்!!
Natural remedies for bed bugs during monsoon in tamil
வினிகர்:
வினிகர் மூட்டை பூச்சிகளை விரட்டியடிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகரை நிரப்பி அதை மெத்தையில் தெளிக்கவும். பிறகு ஈரமான துணியால் படுக்கையை துடைக்கவும். இப்படி செய்தால், மெத்தையில் இருக்கும் மூட்டை பூச்சிகள் செத்து மடியும். அதுமட்டுமின்றி, இனி பூச்சிகள் வரவே வராது.
இதையும் படிங்க: Kitchen Tips : வருடம் ஆனாலும் அரிசி, பருப்பில் வண்டு வராது.. ஸ்டோர் பண்ண சூப்பர் டிப்ஸ்!
5. Preventing bed bugs during monsoon in tamil
தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய்:
மூட்டை பூச்சிகளை விரட்ட தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய் சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெய்யில் இருக்கும் பண்புகள் மூட்டை பூச்சிகளை கொல்லும். இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் 2-3 துளிகள் தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து, அதை படுக்கையில் தெளிக்கவும். இப்படி செய்தால் நிச்சயமாக படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சிகள் வரவே வராது.