தினமும் காலை வெறும் வயிற்றில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது. எனவே தினமும் இந்த வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய்க்கு எதிர்த்துப் போராடக் கூடிய ஆற்றல் உங்களது உடலுக்கு கிடைக்கும்.
உடலில் ஆற்றலை அதிகரிக்கும்:
செவ்வாழைப்பழத்தில் சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளன. அவை உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்கும். எனவே காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் வெறும் வயிற்றில் இதை எடுத்துக் கொள்ளலாம்.
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது:
சிவப்பு வாழைப்பழத்தில் இருக்கும் கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குறிப்பாக வயது அதிகரிப்பால் ஏற்படும் கண் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இந்த பழம் பெரிதும் உதவுகின்றது.