காலை vs மாலை: எப்ப வாக்கிங் போறது எடையை குறைக்க உதவும்?

Published : Dec 17, 2024, 08:59 AM ISTUpdated : Dec 17, 2024, 09:16 AM IST

Walking For Weight Loss : வேகமாக உங்களது எடையை குறைக்க நீங்கள் காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வாக்கிங் செல்வது சிறந்தது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
காலை vs மாலை: எப்ப வாக்கிங் போறது எடையை குறைக்க உதவும்?
Benefits of Walking in tamil

நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலை வாக்கிங் செல்கிறோம். காலையில் வாக்கிங் செல்வதுடன் அந்த நாளை தொடங்கும் போது நாம் மிகவும் புத்துணர்ச்சியுடனும், நாள் முழுவதும் ஆற்றலுடனும் இருக்கிறோம். சிலர் மாலை நேரத்திலும் நடைபயயிற்சி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் உடல் எடை இழப்பு என்று வரும்போது காலை அல்லது மாலை எந்த நேரத்தில் நடை பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எனவே, உடல் எடையை வேகமாக குறைக்க எந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
Morning Walking Benefits in Tamil

காலை நடைபயிற்சி நன்மைகள்:

காலையில் நடைபயிற்சியுடன் நாளை தொடங்கினால் மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். காலையில் நடைப்பயிற்சி செய்தால் கலோரிகள் மிக வேகமாக எரிக்கப்படும். முக்கியமாக வயதானவர்கள் தினமும் காலை நடைபயிற்சி சென்றால் முழங்கால் வலி பிரச்சனை நீங்கும். இது தவிர சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதையும் படிங்க:  வெறும் 15 நிமிடம் வாக்கிங்.. எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

35
Evening Walking Benefits in Tamil

மாலை நடைபயிற்சி நன்மைகள்:

நாளின் சோர்வு மற்றும் பதற்றத்தை போக்க மாலை நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். சிலருக்கு பிஸியான வாழ்க்கை முறையில் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்ய முடியாது. அத்தகைய நபர்கள் உடல் எடையை குறைக்க விரும்பினாலோ, பிற நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் நீங்கள் மாலை நேரத்தில் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். ஏனெனில், மாலை நேர நடை பயிற்சி கலோரிகளை மிக வேகமாக எரிக்கும். குறிப்பாக உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் அது வியர்வை வழியாக வெளியேறும். இது தவிர மன அழுத்தம், முதுகு வலி, தசை வலி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும். முக்கியமாக மாலை நடைபயிற்சி செய்வது இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

45
walking for weight loss in tamil

வேகமாக எடையை குறைக்க எது பெஸ்ட்:

காலை அல்லது மாலை இந்த இரண்டு நேரத்திலும் வாக்கிங் செல்வது பல நன்மைகள் கிடைக்கும் என்றாலும், எடை இழப்பு என்று வரும்போது காலை நடைபயிற்சி தான் பெஸ்ட். அதுவும் காலையில் 7-9 மணி நேரத்தில் வாக்கிங் செல்வது நல்லது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. இருந்த போதிலும் மாலையில் வாக்கிங் செல்வது குறைவான பலன்களை கொடுக்கும் என்றில்லை. மாலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைத்துவிடலாம். எடை இழப்புக்கு வாக்கிங் நேரம் மட்டுமல்ல பல விஷயங்களும் மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:  உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?

55
walking tips in tamil

வாக்கிங் செல்லும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்:

- வாக்கிங் செல்லும்போது உங்களது தோரணையை கவனித்துக் கொள். அதாவது நடக்கும்போது கீழ்நோக்கி பார்க்காதே. இதன் காரணமாக முதுகு வலி பிரச்சனை வரலாம்.

- அதுபோல நடக்கும் போது மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்கவும்.

- ஒரே முறையில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வேகத்தை மாற்றாதீர்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களது சமநிலையை இழக்க நேரிடும். எனவே சீரான வேகத்தில் நடங்கள்.

- வாக்கிங் செல்லும்போது அதற்கு ஏற்ப ஆடைகள், காலணிகள் பயன்படுத்துங்கள்.

- வாக்கிங் செல்லும் முன் உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories