Published : Dec 17, 2024, 01:13 PM ISTUpdated : Dec 17, 2024, 01:19 PM IST
Fridge Defrosting Safety Tips : ஃப்ரீசரில் குவியும் ஐஸ்கட்டிகள் சேராமல் இருக்க உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
பொதுவாக எல்லோருடைய வீட்டில் பிரிட்ஜ் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதை பராமரிப்பது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக சில சமயங்களில் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் கட்ட தொடங்கும். இதனால் ஃப்ரீசரின் கதவை திறக்கவும் மூடவும் சிரமமாக இருக்கும். இது தவிர ஃப்ரீஸரில் பிற பொருட்களை வைப்பதற்கும், அதை சுத்தம் செய்வதற்கும் மிகவும் கடினமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் உருவாவருவதை தடுக்க உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் நீங்கள் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பாக ஃப்ரிஜின் சுவிட்ச் ஆப் செய்து விடவும். அப்போதுதான் ஃப்ரீசரில் கெட்டியாக படிந்துள்ள ஐஸ் கட்டிகளை சுலபமாக அகற்ற முடியும். முக்கியமாக ஃப்ரீசரில் குவிந்திருக்கும் ஐஸ்கட்டிகளை அகற்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அவை ஃப்ரீசரை சேதப்படுத்திவிடும்.
ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகளை அகற்ற உருளைக்கிழங்கு பயன்படுத்தும் முறை:
இதற்கு முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு துண்டாக வெட்டி பிறகு ஒரு கத்தியவைத்து உருளைக்கிழங்கு மீது கீறி கொள்ளுங்கள். பிறகு அதன் மீது உப்பு தடவிக் கொள்ளுங்கள். இப்போது உப்பு தடவிய பகுதியை வைத்து ஃப்ரீசரில் நன்றாக தேய்க்கவும். இப்படி தேய்த்தால் பிரீசரில் குவிந்திருக்கும் ஐஸ்கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் சேராது. அதன் பிறகு ஒரு துணியைக் கொண்டு ஃப்ரீசரை நன்கு துடைத்து விடுங்கள்.
- இதற்கு ஒரு சூடான நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்த பாத்திரத்தை ஃப்ரீசரில் சிறிது நேரம் வைத்து விடுங்கள் ஐஸ்கட்டிகள் அனைத்தும் உருகிவிடும்.
- மற்றொரு வழி என்னவென்றால், ஃப்ரிட்ஜில் சுவிட்சை அனைத்துப் பிறகு சூடான நீரை ஃப்ரீசரில் ஐஸ்கட்டிகள் மீது ஊற்றவும். இப்படி செய்தால் ஐஸ்கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும்.