ஃபிரிட்ஜை பராமரிப்பது எப்படினு தெரியவில்லையா..? அப்ப முதல் இத படிங்க..
உங்கள் ஃபிரிட்ஜை சுத்தம் செய்து ஒழுங்கமைக்க சில எளிய மற்றும் வசதியான வழிகள் இங்கே உள்ளன. அவ நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இன்றைய காலகட்டத்தில் ஃபிரிட்ஜ் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். அதன் உதவியுடன் பல பொருட்கள் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் தேவை அதிகரிப்பதில் ஆச்சரியம் இல்லை. குறிப்பாக ஃபிரிட்ஜ் நீண்ட காலமாக இருக்க அதை சுத்தமாகவும் முறையாகவும் பராமரிக்க வேண்டும்.
அதேசமயம் ஃப்ரிட்ஜை ஒழுங்கமைப்பது எளிதான காரியம் அல்ல. ஏனென்றால், காய்கறிகள் உணவுகள், மசாலா பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற அனைத்தும் அங்கு தான் இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதை ஒழுங்கமைக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
ஆனால் எங்கு தொடங்குவது என்று யோசித்து அப்படியே விட்டுவிடுவீர்கள். ஏனென்றால், அது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, உங்கள் பிரிட்ஜை சுத்தம் செய்து ஒழுங்கமைக்க சில எளிய மற்றும் வசதியான வழிகள் இங்கே உள்ளன. அவ நிச்சயம் உங்களுக்கு உதவும்.
ஸ்டோரேஜ் பாக்ஸ்: வீட்டில் எஞ்சி இருக்கும் உணவுகளை ஸ்டோரேஜ் பாக்ஸில் வைத்து ஃப்ரிட்ஜில் வையுங்கள். இது கசிவை தடுப்பதோடு ஃப்ரிட்ஜை சுத்தமாகவும் வைத்திருக்கும். முக்கியமாக, ஸ்டோரேஜ் பாக்ஸை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து இடத்தை மிச்சப்படுத்துங்கள்.
ஒரே அளவிலான டப்பாக்கள்: உணவை பிரிட்ஜில் வைக்க பாத்திரங்களுக்கு பதிலாக, ஒரே அளவிலான டப்பாக்களை பயன்படுத்தவும். இது குறைந்த இடத்தில் அதிக பொருட்களை வைப்பது எளிதாக்கும்.
ஜிப்லாக் பை: நீங்கள் ஏற்கனவே வெட்டிய பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு ஜிப்லாக் பைகளை பயன்படுத்துங்கள். இதனால் இடம் மிச்சமாகும்.
இதையும் படிங்க: உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!
சுத்தமாக வையுங்கள்: பிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் அடிக்காதபடி வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்யுங்கள்.
இதையும் படிங்க: ஃப்ரீசரில் ஐஸ் கட்டுவது ஏன்? அதை எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ் இதோ!
டிரான்ஸ்பரன்ட் பாக்ஸ்: உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தரும் வகையில் என ட்ரான்ஸ்பரென்ட் பாக்ஸ்களை பயன்படுத்துங்கள். அப்போதுதான் பொருட்களின் அளவு மற்றும் வகைகளை உங்களால் சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.
அதிகம் வாங்க வேண்டாம்: நீங்கள் ஒரே நேரத்தில் அதிக பொருட்கள் வாங்கினால் பிரிட்ஜில் பொருட்களை வைக்க இடம் இருக்காது. எனவே, பிரிட்ஜில் இருக்கும் இடத்தை மனதில் வைத்து பொருட்களை வாங்குவது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D