
முட்டை மற்றும் பால் இவை இரண்டும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் இவை இரண்டும் ஒன்றாக இணைந்தால் உடலில் என்னென்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. அதுபோல மூட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். இதனால்தான் பலர் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது உங்களுக்கு நன்மைக்கு பதிலாக மோசமான தீங்கு தான் விளைவிக்கும் தெரியுமா? எனவே இந்த பதிவில் பால் மற்றும் முட்டை இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் நமது ஆரோக்கியத்திற்கு எந்த மாதிரியான தீங்கு விளைவுக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வாமை:
நீங்கள் முட்டை மற்றும் பால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அதாவது உங்களுக்கு பால் அல்லது முட்டையால் ஒவ்வாமை இருந்தால், இவை இரண்டையும் நீங்கள் ஒருபோதும் ஒன்றாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் சில சமயம் இவை இரண்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது உங்களுக்கு அரிப்பு மற்றும் சுவாச பிரச்சனை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதய பிரச்சினைகள்:
சில பாடி பில்டர்கள் தசைகளை வளர்ப்பதற்கு, உடலில் புரதத்தின் அளவை மேம்படுத்துவதற்கு பாலுடன் 4-5 முட்டைகளை சேர்த்து சாப்பிடுகிறார்கள். ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதனால் இதய பிரச்சினை தான் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிக்க சரியான நேரம் எது? யாரெல்லாம் குடிக்கக் கூடாது?
செரிமான பிரச்சனை:
பால் மற்றும் முட்டை இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உங்களது செரிமானத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். ஏனெனில், இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் போது அது உங்கள் செரிமான அமைப்பில் அதிக சுமையை ஏற்படுத்தும். சில சமயங்களில் இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் வாயு, வீக்கம், அமிலத்தன்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அசெளகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிரமம்:
முட்டையுடன் பால் சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் கால்சியம், புரதம் மற்றும் பயோட்டின் உறிஞ்சுவதில் உங்கள் உடல் மிகவும் சிரமத்தை எதிர்கொள்ளும். மேலும் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நன்மைக்கு பதிலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும்.
இதையும் படிங்க: முட்டைகளை சேமிப்பதற்கான சரியான வழி இதுதான்!
உடல் சமநிலையை இழக்கும்:
நிபுணர்களின் கூற்றுப்படி நீங்கள் பால் மற்றும் முட்டையை சேர்த்து சாப்பிடும் போது உடலில் சமநிலையின்மை ஆபத்து அதிகரிக்கும் ஏனெனில் முட்டை இயற்கையாகவே சூடான தன்மை கொண்டது. அதேசமயம் பால் குளிர்ச்சியானது.
குறிப்பு : நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அல்லது ஏதாவது மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.