குளித்துப் பிறகு அரிப்பு ஏற்படுவது பெரும்பாலும், நீர் மற்றும் வெப்பநிலை உங்களது சருமத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதன் காரணமாக அமைகின்றது. பொதுவாக நம்முடைய சருமத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இந்த அடுக்கு பாதிக்கப்படும்போதுதான் சருமத்தில் குளித்த பிறகு எரிச்சல், கூச்ச உணர்வு, அரிப்பு ஏற்படுகிறது.
வெதுப்பான நீர் மற்றும் நீண்ட குளியல் :
பொதுவாக சோர்வாக இருக்கும் போது அல்லது கை, கால்கள், உடம்பு வலி இருக்கும் போது சூடான நீரில் குளிக்க விரும்புவோம். சூடான நீர் குளியல் உடலுக்கு ஆற்றலை தரும். எனவே பெரும்பாலானூர் சூடான நீரில் நீண்ட நேரம் குளிப்பார்கள். ஆனால் அப்படி குளிப்பது உங்களது சருமத்தை உணர்த்துவது மட்டுமல்லாமல் உணர்திறன் மிக்கதாகவும் ஆக்குகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பது உங்களது சருமத்தை வறட்சியாக மாற்றிவிடும்.