வாழைப்பழம் நல்லது தான்.. ஆனா வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா?

First Published | Sep 9, 2024, 9:50 AM IST

Banana Side Effects : வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் எந்தமாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Banana On Empty Stomach In Tamil

காலை உணவு என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்பதால், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவுகளில் பழமும் அடங்கும். அந்த வகையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். இந்த பழம் எல்லா பருவ காலத்திலும் கிடைக்கும். இதனால் தான் பெரும்பாலானோர் தங்களது காலை உணவில் இந்தப் பழத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. இதுகுறித்து, பலரும் சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வாழைப்பழத் தோல் உண்மையில் கரும்புள்ளிகள், முகப்பரு நீக்க உதவுமா?!

Banana On Empty Stomach In Tamil

வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :

வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக, இந்த பழமானது இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அதுமட்டுமின்றி, உடல் சோர்வை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை நிர்வாகிக்கவும், மன இறுக்கத்தை குறைக்கவும், மலச்சிக்கல் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை தடுக்கவும் மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்கவும் இந்த பழம் பெரிதும் உதவுகிறது. இது தவிர, இந்த பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து, உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டி, ரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்தும்.

மேலும் வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், நார்ச்சத்து, பொட்டாசியம் போன்றவை உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறது. முக்கியமாக, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பசி உணர்வையும் குறைக்கிறது.

Latest Videos


Banana On Empty Stomach In Tamil

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது ஏன்?:

வாழைப்பழத்தில் நார்ச்சத்து பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று சொல்லுகின்றனர். இதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

வாழைப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சர்க்கரை இருப்பதால், இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கினாலும், சிறிது நேரம் கழித்து, உடலை சோர்வடைய செய்து விடும். அதுமட்டுமின்றி, இந்த பழம் தற்காலிகமாகவே வயிற்றை நிரப்புகிறது. அதன்பிறகு தூக்க உணர்வு, அதிகப்படியான களைப்பு போன்றவை ஏற்படும். 

மேலும், வாழைப்பழத்தில் இயற்கையாகவே அமலத்தன்மை உள்ளதால், இந்த பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Banana On Empty Stomach In Tamil

எப்படி சாப்பிடலாம்?

நீங்கள் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பினால், அதை தனியாக எடுத்துக் கொள்ளாமல் அதனுடன் சில உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அதன் வீரியத்தை குறைக்கலாம். குறிப்பாக, நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், வாழைப்பழத்துடன் பிற பழங்கள் அல்லது ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க: 10 நிமிடங்கள் போதும்.. கைகளில் கறை படியாமல் வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்யலாம்!!

click me!